ஜன்மத் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜன்மத் கட்சி
जनमत पार्टी
தலைவர்சி. கே. ரௌத்
பொதுச் செயலாளர்சந்தன் குமார் சிங்
நிறுவனர்சி. கே. ரௌத்
குறிக்கோளுரைஇறையாண்மை, ஜனநாயகம், சமூக நீதி, சோசலிசம், மாநிலத் தன்னாட்சி
தொடக்கம்18 மார்ச்சு 2019 (4 ஆண்டுகள் முன்னர்) (2019-03-18)
முன்னர்சுதந்திர மாதேஷ் பிரதேசத்திற்கான கூட்டணி
தலைமையகம்ஜவலகேல், லலித்பூர், பாக்மதி மாநிலம், நேபாளம்
கொள்கைசமூக ஜனநாயகம்[1]
Regionalism
Madhesi rights
நிலைதேசிய அரசியல் கட்சி
உள்ளாட்சி அமைப்புகள்
2 / 753
மேயர்/தலைவர்
தேர்தல் சின்னம்
ஜன்மத் கட்சியின் தேர்தல் சின்னம்
இணையதளம்
janamatparty.org

ஜன்மத் கட்சி (Janamat Party) (நேபாளி: जनमत पार्टी) நேபாளத்தின் தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். சி. கே. ரௌத் என்பவரால் 18 மார்ச் 2019 அன்று துவங்கப்பட்ட இக்கட்சி[2], 2022 நேபாளத் தேர்தல்களில் போட்டியிட்டது.[3]இதன் குறிக்கோளுரை மாநில தன்னாட்சி, சமூக நீதி, சோசலிசம் ஆகும். இதன் பொதுச்செயளார் சந்தன் குமார் சிங் ஆவார். இக்கட்சி, தெற்கு நேபாளத்தின் தெராய் சமவெளியில் வாழும் மாதேசி மக்களின் ஆதரவு பெற்றது. தெராய் சமவெளியில் உள்ள மாதேஷ் மாநிலம் மற்றும் லும்பினி மாநிலங்களில் இக்கட்சி வலுவுடன் உள்ளது.

2022 நேபாளத் தேர்தல்களில் ஜன்மத் கட்சியின் உறுப்பினர்கள் நேபாள பிரதிநிதிகள் சபையில் 6 பேரும், மாதேஷ் மாநிலம் சட்டமன்றத்தில் 13 பேரும், லும்பினி மாநில சட்டமன்றத்தில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்மத்_கட்சி&oldid=3653589" இருந்து மீள்விக்கப்பட்டது