ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்)
சுருக்கக்குறிJSD (L)
தலைவர்அக்சய் பிரதாப் சிங்
தலைவர்ரகுராஜ் பிரதாப் "ராஜ பையா"
நிறுவனர்ரகுராஜ் பிரதாப் சிங்[1]
தொடக்கம்30 நவம்பர் 2018 (2018-11-30) [1]
தலைமையகம்இலக்னோ, இந்தியா
நிறங்கள்  மஞ்சள்   பச்சை [2]
இணையதளம்
http://www.jdl.org.in
இந்தியா அரசியல்

ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) (Jansatta Dal -Loktantrik)என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இது பொதுவாக ராஜா பையா என்று அழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப் சிங் நவம்பர் 2018-ல் லக்னோவின் ரமாபாய் பூங்காவில் தனது 25 ஆண்டுக்கால அரசியலைக் குறிக்கும் பேரணியின் போது தொடங்கப்பட்டது.

தலித்துகள் அல்லாதோருக்கான இட ஒதுக்கீடு முறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள ஏற்றத்தாழ்வு தொடர்பான பிரச்சனைகளைக் கட்சி எழுப்பியுள்ளது. ராஜா பையாவின் கட்சி 2022ஆம் ஆண்டு உ.பி. தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[3] அனைத்து சாதியினருக்கும் சம உரிமைக்காகப் போராடுவதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.[1][4]

ரகுராஜ் பிரதாப் சிங் தவிர, அக்‌ஷய் பிரதாப் சிங், வினோத் சரோஜ் மற்றும் சைலேந்திர குமார் முதலியோர் இக்கட்சிக்கு ஆரம்பக்காலத்தில் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

மேலும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]