உள்ளடக்கத்துக்குச் செல்

ஜனபாகா தியா யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனபாகா தியா யாத்திரை
தர்பார் மார்க்கில் நிறுத்தப்பட்டுள்ள ஜனபாகா தியாவின் தேர்
பிற பெயர்(கள்)சேட்டோ மச்சேந்திரநாத் யாத்திரை
கடைப்பிடிப்போர்[நேபாளம்
வகைமதனம் சார்ந்தது
முக்கியத்துவம்நகரத்தில் அமைதியைப் பரப்புகிறது
கொண்டாட்டங்கள்தேர் ஊர்வலம்
தொடக்கம்மார்ச் மாத கடைசி (சித்திரை சுக்ல அட்டமி)

ஜன பகா தியா யாத்திரை (Jana Baha Dyah Jatra) என்பது நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் ஆண்டுதோறும் நடைபெறும் கருணையின் போதிசத்துவரான சேட்டோ மச்சீந்திரநாத் எனப்படும் ஜனபாகா தியாவின் தேரோட்டமாகும். இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் இருவராலும் வழிபடப்படும் இவர் வழிபடப்படுகிறார். சேட்டோ மச்சேந்திரநாத் அவலோகிதரின் அம்சமாக வழிபடப்படுகிறார்.[1][2] தேசிய சந்திர நாட்காட்டியான நேபாள சகாப்த நாட்காட்டியில் ஆறாவது மாதமான சௌலாவின் பிரகாசமான பதினைந்து நாட்களின் 8 வது நாளில் தொடங்கி 10 வது நாளில் இத்திருவிழா முடிவடைகிறது. இந்த மாதம் இந்து நாட்காட்டியின் சித்திரை மற்றும் கிரெகொரியின் நாட்காட்டியின் ஏப்ரல் மாதத்துடன் ஒத்துப்போகிறது.

இந்த பௌத்த தெய்வம் சமசுகிருதத்தில் ஆர்யவலோகிசுவரர் (அவலோகிதர்) என்றும், சீன மொழியில் ‘வெள்ளை மச்சேந்திரநாத்’ அல்லது ‘வெள்ளை கருணாமயா’ மற்றும் ‘குவான்யின்’ என்றும் அழைக்கப்படுகிறது. அவரது கோவிலுக்குச் செல்ல முடியாத மக்களுக்கு சிலையின் பார்வையை வழங்குவதற்காக வருடாந்திர ஊர்வலம் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[3][4]

வரலாறு

[தொகு]

கெல் டோலில் உள்ள ஜனபாகா கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஜனபாகா தியாவின் உருவம் ஜமாலிடமிருந்து மீட்கப்பட்டதாக ஒரு பாரம்பரியம் உள்ளது. எனவே தேர் ஊர்வலம் இங்கிருந்து தொடங்குகிறது. திருவிழாவின் தோற்றம் எங்கிருந்து தொடங்கியது என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும் இது ஆறாம் நூற்றாண்டில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இது ஏற்கனவே 17 ஆம் நூற்றாண்டில் நன்கு நிறுவப்பட்டதாக வரலாறுகள் காட்டுகின்றன.[5]

கருணாமயரின் இரதங்கள் உருவாக்கப்படும் ஜமால் பகுதியில் உள்ள ஒரு ஜியாபு (நேவார் சமூகத்தில் உள்ள விவசாயி) என்பவர் மூலம் வயல்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகிறது.

ஊர்வலம்

[தொகு]

திருவிழாவின் போது, ​​ஜனபாகா தியாவின் சிலை அவரது கோவிலிலிருந்து தர்பார் மார்க்கில் இருக்கும் ஒரு சிறிய சன்னதிக்கு 35 அடி உயரம் கொண்ட ஒரு தேர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த சிலை தேரில் வைக்கப்படும்போது, கன்சாகர் சாதியைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் குழு தங்கள் இசைக் கருவிகளை நிக்ழத்துவர். அதே நேரத்தில், பாரம்பரிய சீருடைகளை அணிந்துள்ள குருஜு பல்டன் என்ற மரியாதைக் காவலர்கள் தங்கள் தெறாடிகளில் குண்டு வெடித்து நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள். கூட்டம் பின்னர் இசைக்குழுக்களுடன் மத்திய காத்மாண்டு வழியாக ஊர்வலம் செல்லும்.

பக்தர்கள் காணிக்கைகளை செலுத்த அனுமதிக்கும் வகையில் இந்த பயணம் மூன்று கட்டங்களாக செய்யப்படுகிறது. தேர் நிறுத்தப்படும் இடமெல்லாம் தெய்வத்தை கௌரவிப்பதற்காக வழிபடுபவர்கள் பிரசாதங்களின் தட்டுகளையும் வெண்ணெய் விளக்குகளையும் கொண்டு வருகிறார்கள். இந்த நிகழ்வின் சிறப்பு பிரசாதமாக இனிப்பு மார்ஜோரப் பூக்கள் வழங்கப்படுகின்றன.

மூன்று நாள் அணிவகுப்பு காத்மாண்டுவில் நடைபெறும் இரண்டு பெரிய தேரோட்ட விழாக்களில் ஒன்றாகும். மற்றொன்று இந்திர யாத்திரையின் போது நடைபெறும் குமாரி ஜாத்ரா ஆகும். சந்திர நாட்காட்டியின்படி கொண்டாடப்படுவதால் ஜனபாகா தியாவின் தேரோட்டத்தின் தேதி மாறக்கூடியது.

புங்கா தியா யாத்திரை என்று அழைக்கப்படும் இதேபோன்ற தேரோட்ட ஊர்வலங்கள் ஏப்ரல்-மே மாதங்களில் லலித்பூர் மற்றும் தோலகா மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகின்றன.[6]

புகைப்படங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gurung, Roshan (April 2007). "Seto Machhendranath". ECS Nepal. Retrieved 23 April 2013.
  2. Anisha. "Seto Machhendranath Temple". bossnepal.com. 
  3. Locke, S.J., John K. "Newar Buddhist Initiation Rites". INAS Journal. Retrieved 18 April 2013. Page 2.
  4. Yoshizaki, Kazumi (2006). "The Kathmandu Valley as a Water Pot: Abstracts of research papers on Newar Buddhism in Nepal". Retrieved 18 April 2013. Page 5.
  5. Locke, John K. (1985). Buddhist Monasteries of Nepal: A Survey of the Bahas and Bahis of the Kathmandu Valley. Kathmandu: Sahayogi Press. pp. 311, 313.
  6. Tuladhar, Amrit Ratna. "Dolakha Karunamaya". Redstar. Archived from the original on 15 April 2014. Retrieved 28 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனபாகா_தியா_யாத்திரை&oldid=4224065" இலிருந்து மீள்விக்கப்பட்டது