ஜனதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சி
ஜனதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சி (Jantantrik Bahujan Samaj Party) என்பது இந்தியாவில் 1997-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தின் 19 பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்று உருவாக்கிய ஒரு பிளவுபட்ட குழுவாகும். ஜனதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தனர். உத்தரப் பிரதேசத்தில் இவர்கள் கல்யாண் சிங் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தனர். இக்கட்சியின் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசில் அமைச்சர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஜனதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக டி. பி. யாதவும் (மாநிலங்களவை உறுப்பினர்), பொதுச் செயலாளராக ஷாஹிதுல்லா கானும் இருந்தனர்.[1][2][3][4]
ஜனதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சி நிலையற்ற ஒரு கட்சியாக மாறிப் பல பிளவுகளைச் சந்தித்தது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் லோக ஜனசக்தி கட்சிக்குத் தாவினர். இக்கட்சியிலிருந்து பிரிந்த மற்றொரு குழு கிசான் மசுதூர் பகுஜன் கட்சி ஆகும்.[5][6]
ஜனதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சி சிதைந்தபோது, டி. பி. யாதவ் இராட்டிரிய பரிவர்த்தன் தளம் என்ற புதிய கட்சியை அமைத்தார்.
ஜனதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சியை, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிரிந்த மற்றொரு குழுவான லோகதாந்திரிக் பகுஜன் சமாஜ் கட்சியுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh Chief Minister Kalyan Singh gets tough with errant colleagues". India Today. https://www.indiatoday.in/magazine/states/story/19981102-uttar-pradesh-chief-minister-kalyan-singh-gets-tough-with-errant-colleagues-830138-1998-11-02. பார்த்த நாள்: 10 September 2020.
- ↑ "Rajnath Singh tries to rid BJP of under-performers in Uttar Pradesh". India Today. https://www.indiatoday.in/magazine/states/uttar-pradesh/story/20020128-rajnath-singh-tries-to-rid-bjp-of-under-performers-in-uttar-pradesh-796198-2002-01-28. பார்த்த நாள்: 10 September 2020.
- ↑ "Kalyan Singh becomes reticent after his suspension from primary membership of BJP". India Today. https://www.indiatoday.in/magazine/states/story/19991213-kalyan-singh-becomes-reticent-after-his-suspension-from-primary-membership-of-bjp-781361-1999-09-13. பார்த்த நாள்: 10 September 2020.
- ↑ "Exodus from BSP on, may lose more to BJP (IANS Special)". Outlook India இம் மூலத்தில் இருந்து 16 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116030342/https://www.outlookindia.com/newsscroll/exodus-from-bsp-on-may-lose-more-to-bjp-ians-special/1624547. பார்த்த நாள்: 10 September 2020.
- ↑ "BJP saves UP Government but makes itself vulnerable to desertions and political eclipse". India Today. https://www.indiatoday.in/magazine/states/story/19991122-bjp-saves-up-government-but-makes-itself-vulnerable-to-desertions-and-political-eclipse-781523-1999-11-22. பார்த்த நாள்: 10 September 2020.
- ↑ "In UP, parties begin to mushroom before polls". The Asian Age. https://www.asianage.com/india/parties-begin-mushroom-polls-867. பார்த்த நாள்: 10 September 2020.