ஜஜாரியா
தோற்றம்
| தொடங்கிய இடம் | இந்தியா |
|---|---|
| பகுதி | இராசத்தான் |
| முக்கிய சேர்பொருட்கள் | சோளம், பால், நெய், சா்க்கரை, திராட்சை, கொட்டைகள் |
ஜஜாரியா (Jhajariya) என்பது சோளம், பால், நெய் மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்டு, உலர் திராட்சை மற்றும் கொட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுவையான இனிப்புச் சிற்றுண்டி ஆகும். துருவிய அல்லது கொரகொரப்பாக அரைத்த புதிய இனிப்புச் சோளத்தை, அதன் ஈரப்பதம் பெரும்பாலும் வற்றி, உலர்ந்த மணல் போன்ற வடிவத்தை அடையும் வரை சில மணிநேரங்களுக்கு நெய்யில் மெதுவாக வறுக்க வேண்டும்.
ஜஜாரியா என்ற சொல், வைரலான 'ரீயூனியன்' என்ற தலைப்பில் கூகிளின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
அதைச் செய்வதற்கான செய்முறையை விவரிக்கும் ஒரு காணொளி வலையொலியில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Google's India Strategy: One Teardrop at a Time?". NPR. 2013-11-15. Retrieved 2021-02-26.
- ↑ "Jhajariya". 2013-11-17. Archived from the original on 2021-12-21. Retrieved 2021-02-26 – via YouTube.