ஜக்தேவ் சிங் ஜசோவால்
Appearance
ஜக்தேவ் சிங் ஜசோவால் ( Jagdev Singh Jassowal 30 ஏப்பிரல் 1935–22 திசம்பர் 2014 ) பஞ்சாபைச் சேர்ந்த நூலாசிரியர், இலக்கியவாதி, பஞ்சாப் கலாச்சாரம், நாட்டுப்புறக் கலைகளின் மேம்பாட்டுக்கு உழைத்தவர் ஆவார். பஞ்சாபின் பாபா போகா எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.[1][2]
பணிகள்
[தொகு]இந்திய பஞ்சாப் லூதியானா மாவட்டத்தில் ஜசோவால் என்னும் ஊரில் பிறந்த ஜக்தேவ் சிங், அலிகார் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தார். இளமைக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டு 1980 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]. பேராசிரியர் மோகன் சிங் நினைவு அறக் கட்டளையைத் தோற்றுவித்தார். நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவித்தார். பஞ்சாபின் புராதன நடனங்களான பாங்க்ரா, கிட்டா, லோக் நாக் போன்றவற்றை மீண்டும் உயிர்ப்பித்து மக்களிடையே பரப்பினார்.