உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக்தீப் சிங் தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்தீப் சிங் தியோ
Jagdeep Singh Deo
ਜਗਦੀਪ ਸਿੰਘ ਦਿਓ
பினாங்கு துணை முதலமைச்சர் II
பதவியில் உள்ளார்
பதவியில்
16 ஆகத்து 2023
முன்னையவர்இராமசாமி பழனிச்சாமி
பினாங்கு மாநில அமைச்சர்
(வீட்டுவசதி, நகர கிராம திட்டமிடல்)
(9 மே 2013–15 மே 2018)

(வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர கிராம திட்டமிடல்)
(16 மே 2018–13 ஆகத்து 2023)

(மனித மூலதன மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம்)
(16 ஆகத்து 2023 முதல்)
பினாங்கு மாநில சட்டமன்றம்
டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2008
பெரும்பான்மை1,855 (2008); 5,020 (2013); 9,561 (2018); 8,344 (2023)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Jagdeep Singh Deo s/o Karpal Singh

3 மே 1971 (1971-05-03) (அகவை 55)
பினாங்கு, மலேசியா
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி ஜசெக (1994 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
(GR) காகாசான் (1994–1996); (BA) மாற்று முன்னணி (1999–2004); (PR) பாக்காத்தான் ராக்யாட் (2008–2015); (PH) பாக்காத்தான் (2015 முதல்)
உறவுகள்கோவிந்த் சிங் தியோ (சகோதரர்); ராம் கர்பால் சிங் (சகோதரர்)
பெற்றோர்கர்பால் சிங் (தந்தை)
குர்மிட் கவுர் (தாயார்)
பணிஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

ஜக்தீப் சிங் தியோ (ஆங்கிலம்; மலாய்: Jagdeep Singh Deo) (பிறப்பு: 3 மே 1971) என்பவர் மலேசிய அரசியல்வாதி, வழக்கறிஞர்; 16 ஆகத்து 2023 முதல் பினாங்கு துணை முதலமைச்சர் II பதவி; மே 2013 முதல் முதலமைச்சர்கள் லிம் குவான் எங்; மற்றும் சாவ் கொன் யாவ் நிர்வாகத்தின் கீழ் இருந்த பாக்காத்தான் ராக்யாட் (PR); பாக்காத்தான் அரப்பான் (PH) மாநில நிர்வாகங்களில் பினாங்கு மாநில அமைச்சர் பதவி; 8 மார்ச் 2008 முதல்; பினாங்கு மாநிலத்தின் டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியை மூன்று தவணைகளுக்கு வகித்தவர் ஆவார்.

அவர் பாக்காத்தான் அரப்பான் (PH); மற்றும் பாக்காத்தான் ராக்யாட் (PR) கூட்டணிகளின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினர் ஆவார். ஜெலுத்தோங் புலி (Tiger of Jelutong) எனப் புகழ் பெற்ற ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கர்பால் சிங் அவர்களின் மூத்த மகனும் ஆவார்.

மேலும் அவர், மலேசிய இலக்கவியல் அமைச்சரும், டாமன்சாரா மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினரான கோவிந்த் சிங் தியோ; மற்றும் புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினரான ராம்கர்பால் சிங் ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1994-இல் தமது தந்தை கர்பால் சிங்கின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஜனநாயக செயல் கட்சியில் (DAP) சேர்ந்தார். ஜக்தீப்பின் முதல் அரசியல் செயல்பாடு 1999-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத் தேர்தலில் நிகழ்ந்தது. அப்போது அவர் புக்கிட் குளுகோர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும், அவர் 38% வாக்குகளை மட்டுமே பெற்று, அப்போதைய ஆளும் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியைச் சேர்ந்த கோய் கர் உவா (Koay Kar Huah) என்பவரிடம் தோல்வியடைந்தார்.

2008 பினாங்கு மாநிலத் தேர்தலில், பாரிசான் நேசனல் கூட்டணியின் அப்போதைய உறுப்பினரான ஓங் தியான் லாய் என்பவரைத் தோற்கடித்து, டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதியை பாரிசான் நேசனல் கூட்டணியிடம் இருந்து கைப்பற்றினார். அப்போது ஜனநாயக செயல் கட்சி, பிகேஆர் (PKR); மற்றும் மலேசிய இசுலாமிய கட்சி (PAS) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பாக்காத்தான் ராக்யாட் (PR) (தற்போது பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணி என்று அழைக்கப்படுகிறது); பினாங்கு மாநிலத்தின் பாரிசான் நேசனல் அரசாங்கத்தைக் கவிழ்த்து, பினாங்கில் ஆட்சிக்கு வந்தது.

டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதி

[தொகு]

2013 பினாங்கு மாநிலத் தேர்தலில், டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதியை கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் லிம் குவான் எங் அவர்களால் பினாங்கு மாநில அரசாங்கத்தில் பினாங்கு மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜக்தீப் சிங் தியோவின் பொறுப்புகளில் பினாங்கு மாநிலத்தின் வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறைகள் அடங்கும்.[1]

2018-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத் தேர்தலில், டத்தோ கெராமாட் சட்டமன்றத் தொகுதியில் ஜகதீப் மீண்டும் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[2] ஆகத்து 2023-இல், பினாங்கு துணை முதலமைச்சர் II பதவியை ஏற்றார்.[3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பினாங்கு மாநில சட்டமன்றம்
ஆண்டு தொகுதி வேட்பாளர் பெற்ற
வாக்குகள்
% எதிரணி பெற்ற
வாக்குகள்
% மொத்த
வாக்கு
பெரும்
பான்மை
%
1999 N28 புக்கிட் குளுகோர் ஜக்தீப் சிங் தியோ (ஜசெக) 6,581 38.31% கோய் கர் உவா (மசீச) 10,598 61.69% 17,179 4,017 73.10%
2008 N29 டத்தோ கெராமாட் ஜக்தீப் சிங் தியோ (ஜசெக) 7,995 59.14% ஓங் தியான் லை (கெராக்கான்) 6,140 25.47% 19,588 1,855 73.73%
2013 ஜக்தீப் சிங் தியோ (ஜசெக) 11,720 66.69% ஓங் தியான் லை (கெராக்கான்) 6,700 31.93% 18,964 5,020 85.20%
2018 ஜக்தீப் சிங் தியோ (ஜசெக) 13,712 75.30% லீ பூன் டென் (கெராக்கான்) 4,151 22.80% 18,504 9,561 81.80%
லிம் பூ சாங் (மஐக) 194 1.10%
முகமது மஜ்னூன் வகாப் (சுயேச்சை) 146 0.80%
நிக்கோலசு டயான் மோர்கன் (பினாங்கு முன்னணி) 18 0.10%
2023 ஜக்தீப் சிங் தியோ (ஜசெக) 13,398 72.61% எங் சீ லின் (கெராக்கான்) 5,054 27.39% 18,635 8,344 69.56%

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A 'fresh' Penang exco line-up - Nation | The Star Online". www.thestar.com.my. Retrieved 2018-06-15.
  2. "Five new faces in Penang exco line-up - Nation | The Star Online". www.thestar.com.my. Retrieved 2018-06-15.
  3. "Jagdeep Singh sworn in as Penang deputy chief minister II". 16 August 2023. https://www.malaymail.com/news/malaysia/2023/08/16/jagdeep-singh-sworn-in-as-penang-deputy-chief-minister-ii/85499.

நூல்கள்

[தொகு]
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.
  • Hussain, M. (1987). Membangun demokrasi: Pilihanraya di Malaysia. Kuala Lumpur: Karya Bistari.
  • Ibnu, H. (1993). PAS kuasai Malaysia?: 1950-2000 sejarah kebangkitan dan masa depan. Kuala Lumpur: GG Edar.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்தீப்_சிங்_தியோ&oldid=4511105" இலிருந்து மீள்விக்கப்பட்டது