ஜெகதீஷ் டைட்லெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜக்திஷ் டைட்லெர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜெகதீஷ் டைட்லெர்
2005 இல் ஜெகதீஷ் டைட்லெர்
மத்திய அமைச்சர்
பதவியில்
1991 (1991)–1996 (1996)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜெகதீஷ் கபூர்

17 ஆகத்து 1944 (1944-08-17) (அகவை 79)
குஜ்ரன்வாலா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய பஞ்சாப், பாக்கித்தான்)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்புது தில்லி

ஜெகதீஷ் டைட்லெர் (Jagdish Tytler) (பிறப்பு ஜகதீஷ் கபூர் (Jagdish Kapoor) ; 17 ஆகஸ்ட் 1944) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பல அரசாங்கப் பதவிகளை வகித்துள்ளார், கடைசியாக வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருந்தார். 1984இல் சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றதையடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது தில்லியில் சீக்கிய சமூகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்பாடு செய்ததில் இவருக்குப் பங்கு இருந்ததாக நீதிபதி நானாவதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் குற்றம் சாட்டியது. மே 20, 2023 அன்று இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தநடுவண் புலனாய்வுச் செயலகத்தால் கலவரங்கள் தொடர்பான குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டதையடுத்து இவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து பதவி விலகினார்.

தற்போது இவர் காங்கிரசு கட்சியின் தில்லிப் பிரிவின் நிரந்தர குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

இவர் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பான சர்ச்சையின் காரணமாக, 2009 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரசுக் கட்ட்சியின் வேட்பாளர் பட்டியலில் இவர் இடம் பெறவில்லை. [1]

சொந்த வாழ்க்கை[தொகு]

ஜெகதீஷ் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் (இப்போது பாக்கித்தானில் உள்ளது) குஜ்ரன்வாலாவில் ஒரு பஞ்சாபி கத்ரி குடும்பத்தில் ஒரு இந்து தந்தைக்கும் ஒரு சீக்கியத் தாய்க்கு ஜெகதீஷ் கபூராக பிறந்தார். [2] தி பொதுப் பள்ளி மற்றும் சம்மர் ஃபீல்ட்ஸ் பள்ளி உட்பட பல பொதுப் பள்ளிகளின் நிறுவனரான கல்வியாளர் ஜேம்ஸ் டக்ளஸ் டைட்லரால் வளர்க்கப்பட்டார். [3] 2011 ஆம் ஆண்டில், இந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட புரி ஜெகன்நாதர் கோயிலில் இவர் நுழைந்தது, ஒடிசா சட்டமன்றத்தில் இவரது மதத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது. [4] இவர் கிறித்துவ மதத்திற்கு மாறியதை மறுத்தார். மேலும் தன்னை வளர்த்த ஜேம்ஸ் டக்ளஸ் டைட்லருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது பெயரை மாற்றிக் கொண்டதாகக் கூறினார். [5]

காங்கிரசின் இளைஞர் அமைப்பில் உறுப்பினராக இருந்த இவர், 1980 இல் மக்களவைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையிலும், பின்னர் தொழிலாளர் துறையிலும் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 1991 இல் மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய தரைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2004 இல், மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்[தொகு]

1984ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதை இவர் மறுத்தார். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றதை அடுத்து கலவரம் ஏற்பட்டது. இந்திரா காந்தியின் உடலுடன் இறுதிச் சடங்கிற்காக தீன் மூர்த்தி பவனில் இருந்ததாகவும், ஆசாத் சந்தைக்கு அருகில் உள்ள குருத்வாரா புல்பங்காசியில் இந்த நிகழ்வுகள் நடந்தபோது தான் துக்கத்தில் இருந்ததாகவும் இவர் கூறினார். [6] [7] நடுவர் புலனாய்வு செயலகத்தால் 1984 கலவரம் தொடர்பான குற்றங்களுக்காக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மே 20, 2023 அன்று இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது [8] [9]

நீதிபதி நானாவதி ஆணையம்[தொகு]

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது "அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க, மே 2000 இல் தேசிய சனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ஜி. டி. நானாவதியின் ஆணையத்தின் அறிக்கை, கலவரத்தை ஒழுங்கமைத்ததில் "மிகவும்" பங்கு இருந்ததாகக் கூறியது. தாக்குதல்கள். எவ்வாறாயினும், அன்றைய காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு, உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், இவர் மீதோ அல்லது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு யார் மீதோ வழக்குத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தது. [10]

தான் குற்றமற்றவர் என்றும், அந்த சமயத்தில் தான் அந்தப் பகுதியில் இருக்கவில்லை என்றும், அதற்கு முந்தைய எட்டு விசாரணை ஆணையங்களும் தன்னை விடுவித்ததாகவும் கூறினார். [11] 10 ஆகஸ்ட் 2005 அன்று, நானாவதி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதைத் தடுப்பது தனது "தார்மீகக் கடமை" என்று கூறி, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். [12]

2007 இல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருதல்[தொகு]

31 அக்டோபர் 1984 இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் சதி செய்ததாகக் கூறப்படும் டைட்லருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் நவம்பர் 2007 இல் இந்தியாவின் நடுவண் புலனாய்வுச் செயலகம் முடித்து வைத்தது. கலவரத்தின் போது கூட்டத்தைத் தூண்டியதாக டைட்லருக்கு எதிரான எழுந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் சாட்சியும் கிடைக்கவில்லை என்று தில்லி நீதிமன்றத்தில் நடுவண் புலனாய்வுச் செயலகம் அறிக்கை சமர்ப்பித்தது. [13] [14] [15]

நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அறிக்கைக்குப் பிறகு 18 டிசம்பர் 2007 அன்று, வழக்குத் தள்ளுபடி செய்ய்யப்பட்டது. கலவரம் தொடர்பாக டைட்லருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நடுவண் புலனாய்வுச் செயலகத்துக்கு உத்தரவிட்டார். [16]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் தில்லியைச் சேர்ந்த ஜெனிபர் என்பவரை மணந்தார். தம்பதியினருக்கு சித்தார்த்தா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். [17] இவரது மகன் சித்தார்த்தா ஆடை வடிவமைப்பாளாக இருக்கிறார்.[18]

ஜெகதீஷ் டைட்லர் ஒரு கிறிஸ்தவரால் வளர்க்கப்பட்டாலும் தன்னை ஒரு இந்து என்றே அடையாளப்படுத்துகிறார். 2011 ஆம் ஆண்டு இவர் புரி ஜெந்நாதர் கோயிலுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் அக்கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. டைட்லர் தான் ஒரு இந்து என்றும் புரி கோவிலுக்கு கடந்த காலத்தில் நான்கு முறை சென்றுள்ளேன் என்றும் கூறினார். [19]

சான்றுகள்[தொகு]

  1. Changing Electoral Politics in Delhi: From Caste to Class, SAGE, p.95, Sanjay Kumar
  2. A Biographical Encyclopedia of Contemporary Genocide: Portraits of Evil and Good. ABC-CLIO. 2012. https://books.google.com/books?id=55NPpA6EvyMC&pg=PA318. 
  3. "Bio-Data of Jagdish Singh Tytler". Press Information Bureau, Government of India. 14 July 2004.
  4. "Ruckus in Orissa assembly over Tytler's Jagannath Temple visit". 28 March 2011. http://www.ndtv.com/article/india/ruckus-in-orissa-assembly-over-tytler-s-jagannath-temple-visit-94812. 
  5. "Jagdish Tytler clarifies, BJD cries riots - Politics over temple trip takes centre stage as Congress leader is back in state".
  6. "Jagdish Tytler: My own daughter asks if I killed Sikhs". BBC. 19 February 2014. https://www.bbc.com/news/world-asia-india-26237133. 
  7. "No fresh FIR against Congress leader Jagdish Tytler, CBI tells Delhi court". The Indian Express. 9 July 2015. https://indianexpress.com/article/india/india-others/influencing-witness-no-fresh-fir-against-jagdish-tytler-cbi-to-court/. 
  8. "1984 riots case: Congress' Jagdish Tytler charged with murder by CBI". https://www.cnbctv18.com/india/1984-riots-case-congress-jagdish-tytler-charged-with-murder-by-cbi-says-report-17444161.htm/amp. 
  9. "Jagdish Tytler asked mob to kill Sikhs, loot shops: Eyewitness accounts in CBI chargesheet". https://www.indiatoday.in/amp/india/story/jagdish-tytler-asked-mob-to-kill-sikhs-loot-shops-eyewitness-accounts-in-cbi-chargesheet-2416766-2023-08-05. 
  10. "Indian politicians clash over report on anti-Sikh riots". CBC News. 9 August 2005. https://www.cbc.ca/news/world/indian-politicians-clash-over-report-on-anti-sikh-riots-1.519021. 
  11. "I am innocent: Tytler". Rediff. 8 August 2005. http://in.rediff.com/news/2005/aug/08nanavati2.htm. 
  12. "Jagdish Tytler resigns from Union Cabinet". Outlook. 10 August 2005. https://www.outlookindia.com/newswire/story/jagdish-tytler-resigns-from-union-cabinet/316159. 
  13. "The Tribune, Chandigarh, India - Main News".
  14. "Fresh probe into India politician". http://news.bbc.co.uk/2/hi/south_asia/7149322.stm. 
  15. "The Tribune, Chandigarh, India - Main News".
  16. "1984 riots: CBI to re-investigate Tytler's role | India News - Times of India".
  17. Support system, Telegraph, 01.04.06
  18. I have a much bolder, stronger woman with more adventurous mentally: Designer Siddartha Tytler, The Daily Guardian, August 12, 2021
  19. I am a Hindu, roars Tytler, Siraj Muhammad, March 20, 2011

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதீஷ்_டைட்லெர்&oldid=3810958" இலிருந்து மீள்விக்கப்பட்டது