உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக்ஜித் சிங் சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்ஜித் சிங் சோப்ரா
பிறப்பு(1935-06-15)15 சூன் 1935
இந்தியா
இறப்பு18 சனவரி 2019(2019-01-18) (அகவை 83)
பணிநரம்பியல் மருத்துவர், மருத்துவ எழுத்தாளர்
அறியப்படுவதுமருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுகலை நிறுவனம், நரம்பியல் துறையின் நிறுவனர்
விருதுகள்பத்ம பூஷண்,பி. சி. ராய் விருது, ஐசிஎம்ஆர் (ICMR) அம்ருத் மோடி ஆராய்ச்சி விருது

ஜக்ஜித் சிங் சோப்ரா (Jagjit Singh Chopra) (15 சூன் 1935 – 18 சனவரி 2019) என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர், மருத்துவ எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுகலை நிறுவனம் (PGIMER), சண்டிகரில் நரம்பியல் துறையை உருவாக்கியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1] இவர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சண்டிகர் நிறுவனத்தின் முதல் முதல்வராகவும், இந்திய நரம்பியல் அகாடமி அமைப்பின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[2] இவர் எழுதிய வெப்பமண்டலப் பகுதிகளில் நரம்பியல் என்ற நூல் வெப்பமண்டல நாடுகளில் நரம்பியல் மருத்துவம் தொடர்பான முக்கிய நூலாகும். இதில் 146 நரம்பியல் நிபுணர்களின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.[3]

வாழ்க்கை

[தொகு]

ஜக்ஜித் சிங் சோப்ரா 1935 ஆம் ஆண்டு சூன் 15 அன்று இந்தியாவில் பிறந்தார். 1980ஆம் ஆண்டு தேசிய மருத்துவ அறிவியல் கழகம் அமைப்பின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான உயரிய இந்திய விருதான பி. சி. ராய் விருது பெற்றார்.[4] இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) பல்வேறு சொற்பொழிவு விருதுகளைப் பெற்றார். 1981 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அம்ருத் மோடி ஆராய்ச்சி விருதும் பெற்றார். இந்திய மருத்துவத் துறைக்கான பங்களிப்பிற்காக இந்திய அரசு 2008 ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் வழங்கியது.[5] மேலும் மெட்ராஸ் நியூரோ டிரஸ்ட் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார்.[6]

இறப்பு

[தொகு]

ஜக்ஜித் சிங் சோப்ரா சண்டிகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பின்னர் 2019 ஆம் ஆண்டு சனவரி 18 அன்று காலமானார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Modern lifestyle leading to health problems". Indian Express. 10 January 2016. Retrieved 19 June 2016.
  2. "Reflections of Former Presidents" (PDF). Sagar Hospital and Agadi Hospital. 2011. Retrieved 19 June 2016.
  3. Jagjit S. Chopra (1999). Neurology in Tropics. B.I. Churchill Livingstone Pvt Limited. ISBN 978-81-7042-121-4.
  4. "NAMS Fellow" (PDF). National Academy of Medical Sciences. 2016. Retrieved 19 June 2016.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016.
  6. "MADRAS NEURO TRUST".
  7. "PGI neurology department founder Dr Chopra passes away at 84". The Times of India. 20 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்ஜித்_சிங்_சோப்ரா&oldid=4613487" இலிருந்து மீள்விக்கப்பட்டது