ஜகார்த்தா கலைக் கட்டடம்

ஆள்கூறுகள்: 6°10′00″S 106°50′04″E / 6.166540°S 106.834417°E / -6.166540; 106.834417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகார்த்தா கலைக் கட்டடம்
ஜகார்த்தா கலைக் கட்டட முன்பக்க நுழைவாயில்
Map
முந்திய பெயர்கள்Batavia Schouwburg (Dutch colonial era), Sin'tsu Cekizyoo (Japanese occupation), Gedung Komidi[1]
பொதுவான தகவல்கள்
வகைஆபரா அரங்கம்
இடம்சவா பேசர், மத்திய ஜகார்த்தா
நாடுஇந்தோனேசியா
ஆள்கூற்று6°10′00″S 106°50′04″E / 6.166540°S 106.834417°E / -6.166540; 106.834417
துவக்கம்1821[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜே.சி. சல்ட்ஸ்
வலைதளம்
gedungkesenianjakarta.co.id#/SELAMAT%20DATANG

ஜகார்த்தா கலைக் கட்டடம் (Jakarta Art Building) (கெடுங் கெசெனியன் ஜகார்த்தா ), வரலாற்று ரீதியாக ஷௌனொபர்க் வெல்டெவ்ரெடன் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவின் சவா பெசார் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கச்சேரி அரங்கம் ஆகும் , இது டச்சு கிழக்கிந்தியபடேவியா காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

படேவியாவில் ஒரு தியேட்டரை அமைத்து உருவாக்கும் எண்ணம் அந்த நேரத்தில் படேவியா கவர்னர் ஜெனரலான ஹெர்மன் வில்லெம் டேன்டெல்ஸிடமிருந்து வந்தது . ஜகார்த்தாவின் காலனித்துவ பெயர் படேவியா என்பதாகும். இந்த யோசனையை ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் உணர்ந்தார், அவருக்கு உள்ளூர் பண்பாடு, ஆய்வு மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் என்பதில் அதிகமான ஆர்வம் கொண்டிருந்தார். 1814 ஆம் ஆண்டில் "இராணுவ தியேட்டர் இடம்" என்ற பெயரில் வாட்டர்லூப்ளின் (ஜகார்த்தாவில் ஒரு சதுரம், இப்போது லாபங்கன் பான்டெங் ) அருகே ஒரு எளிய முறையில் அமைந்த மூங்கில் கட்டுமானத்தில் வடிவமைக்கப்பட்ட தியேட்டரை உருவாக்க ராஃபிள்ஸ் உத்தரவிட்டார். இது ஆங்கில வீரர்களால் கட்டப்பட்டது. இதில் 250 பேர் அமரும் வசதியினைக் கொண்டது. படேவியாவில் இருந்த இந்த முதல் அரங்கமானது 1811 ஆம் ஆண்டு முதல் 1816 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய வீரர்களின் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆகஸ்ட் 1816 ஆம் நாளன்று, ஆங்கிலேயர்கள் இண்டீஸை டச்சு கிழக்கு இண்டீஸுக்கு திருப்பி கொடுத்தனர். அதன் பின்னர் மறுபடியும் படேவியா நெதர்லாந்தின் ஆளுநரின் கீழ் இருந்தது. ஏப்ரல் 21, 1817 ஆம் நாளன்று டச்சு அமெச்சூர் கலைஞர்களின் குழுக்களால் மீண்டும் அந்தக் கட்டிடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜகார்த்தா கலைக் கட்டடம்

1820 ஆம் ஆண்டில் மூங்கில் தியேட்டரில் மோசமடைந்து போவதற்கான அறிகுறிகளைக் காண முடிந்தது. 1821 ஆம் ஆண்டில், டச்சு காலனித்துவ அரசாங்கத்தின் ஆதரவோடு அந்த அரங்கத்திற்கு பதிலாக புதிய நிரந்தர கட்டட அமைப்பு கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தை வடிவமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடக் கலைஞர் ஜே.சி. சல்ட்ஸ் என்பவர் ஆவார். அவர் படேவியாவில் இருந்த ஹார்மனி சொசைட்டி, என்ற கட்டிடத்தை வடிவமைத்த பெருமையினை உடையவர். இதன் கட்டடம் கட்ட ஒப்பந்தக்காரர் லீ அட்ஜீ என்பவர் ஆவார். புதிய தியேட்டருக்குப் பயன்படுத்த பழைய நகரப் பகுதியில் உள்ள ஸ்பின்ஹுய்களிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டார். இதன் கட்டுமானம் 14 மாதங்கள் நீடித்தது. இது புதியதர பாணியில் வடிவமைக்கப்பட்டது. கெடுங் கோமடி ( "நகைச்சுவை கட்டிடம்") என்று அது அழைக்கப்பட்டது.[2] அக்டோபர் 1821 ஆம் நாளன்று இதனைத் திறந்து வைக்க திட்டமிடப்பட்டது, ஆனால் அப்போது பரவிய காலரா தொற்றுநோய் காரணமாக டிசம்பர் 7 ஆம் நாள் வரை திறப்பு ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இந்தக் கட்டடத்தில் முதன்முதலாக நடைபெற்ற நிகழ்ச்சி ஷேக்ஸ்பியரின் ஓதெல்லோ. நாடகம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், நகைச்சுவைக் கட்டடம் மெதுவான நிலையில் வளர்ச்சியினைக் கண்டது. அத்துடன் அது லாபம் ஈட்டுவதிலும் அதிக சிரமங்களை அது எதிர்கொண்டது. படேவியாவில் ஐரோப்பிய பெண் ஓபரா பாடகர்கள் இல்லாததால் முழுமையான ஆர்கெஸ்ட்ரா அங்கு இல்லாததே அதற்கு முதன்மைக் காரணம் ஆகும். 1848 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனம் தன் முயற்சியில் தோல்வியுற்ற பின்னர் அரசாங்கம் தியேட்டரை தன் பொறுப்பில் கையகப்படுத்திக் கொண்டது. அதை 1892 அம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பினை வைத்திருந்தது. 1911 ஆம் ஆண்டில் அதன் நிர்வாகம் படேவியா நகரத்திடம் ஒதுக்கப்பட்டது.

முதலில், மெழுகுவர்த்திகள் மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி கட்டிடத்தின் உள்ளே வெளிச்சம் அமைக்கப்பட்டது. எரிவாயு ஒளி 1864 ஆம் ஆண்டில் வந்தது. 1882 ஆம் ஆண்டில் கட்டிடத்திற்குள் மின்சாரம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் வாயு ஒளி 1910 வரை வெளியில் பயன்படுத்தப்பட்டது.[3]

1926 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் தேசிய விழிப்புணர்வின் போது, இந்த கட்டிடம் உள்ளூர் இளைஞர் கூட்டணியால் கொங்கிரஸ் பெமோய்டாவுக்கு (இளைஞர் காங்கிரஸ்) என்ற அமைப்பால் பயன்படுத்தப்பட்டது.[4]

1942 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, இந்த கட்டிடம் தற்காலிகமாக ஒரு இராணுவ தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1943 இல் இது சின்ட்சு செக்கிஜூ என்ற பெயரில் ஒரு தியேட்டராக பயன்படுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின்போது, இந்த கட்டிடம் செனிமான் மெர்டேகா ("சுதந்திர கலைஞர்கள்") என அழைக்கப்படும் இளைஞர் கலைஞர்களின் ஒரு கூட்டத்திற்கான இடமாக பயன்படுத்தப்பட்டது. அவர்களில் ரோசிஹான் அன்வர், உஸ்மர் இஸ்மாயில், எல் ஹக்கீம் மற்றும் எச்.பி. ஜாசின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். ஆகஸ்ட் 29, 1945 ஆம் நாளன்று , இந்தோனேசியா அலுவல்பூர்வமாக சுதந்திரம் அறிவித்த பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியான சுகர்னோ, மத்திய இந்தோனேசிய தேசியக் குழுவைத் தொடங்கி வைத்தார், இக் கட்டிடத்தில் அதன் முதல் கூட்டம் நடைபெற்றது.[4]

1951 ஆம் ஆண்டில் இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் சட்டப் புலத்தால் இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. மேலும் 1957 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை இந்தோனேசிய தேசிய நாடக அகாடமியால் இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த கட்டிடம் மறுபடியும் 1968 ஆம் ஆண்டில் அதன் பெயரை பயோஸ்காப் டயானா (டயானா தியேட்டர்) என்று பெயர் மாற்றம் செய்தது. ஒரு வருடம் கழித்து பிரிகேடியர் ஜெனரல் பிம்கேடியின் தலைமையில் கட்டிடத்திற்கான ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் சீன திரைப்படங்களைக் காட்டும் அரங்கமாக இந்த கட்டிடத்தை மாற்றியது. இந்த காலக்கட்டத்தில் இது சிட்டி தியேட்டர் என்று அறியப்பட்டது.[5]

1984 ஆம் ஆண்டில் கட்டிடத்தை அதன் அதனுடைய ஆரம்ப காலச் செயல்பாட்டிற்கு திருப்பிக் கொணரும் வகையில் ஒரு சட்டம் [6] இயற்றப்பட்டது. தொடர்ந்து, இது 3 பில்லியன் ரூபா செலவில் புதுப்பிக்கப்பட்டது. செப்டம்பர் 5, 1987 ஆம் நாளன்று கெதுங் கெசெனியன் ஜகார்த்தா என மறுபெயரிடப்பட்டது, இதற்கு முந்தைய பெயரான கெதுங் கெசெனியன் பசார் பாரு என்பது மாற்றப்பட்டது .

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Schouwburg". Ensiklopedi Jakarta (in Indonesian). Dinas Komunikasi, Informatika dan Kehumasan Pemprov DKI Jakarta. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் July 6, 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Tempat Wisata Sejarah di Jakarta
  3. "Asiarooms - Gedung Kesenian Jakarta". Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  4. 4.0 4.1 "Di Sekitar Gedung Kesenian Jakarta". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
  5. "Tempo". Tempo (Badan Usaha Jaya Press Jajasan Jaya Raya) 3: 196. 1973. https://books.google.com/?id=vLsTAQAAMAAJ&dq=%22city+theater%22+gedung+kesenian+jakarta&q=%22city+theater%22. பார்த்த நாள்: September 1, 2011. 
  6. SK Gubernur KDKI Jakarta tahun 1984

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகார்த்தா_கலைக்_கட்டடம்&oldid=3925081" இலிருந்து மீள்விக்கப்பட்டது