ஜகன்னாத் மல்லிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகன்னாத் மல்லிக்
ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1971–1994
தொகுதிஜாஜ்பூர் சட்டசபைத் தொகுதி
விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் (ஒடிசா)
பதவியில்
1978–1994
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1999–2004
தொகுதிஜாஜ்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூலை 1937
மொகந்தி, பட்னா, ஒடிசா
இறப்பு7 ஆகத்து 2016
அரசியல் கட்சிபிரகதி சட்டமன்றக் கட்சி, பிஜு ஜனதா தளம்
துணைவர்கல்யாணி மல்லிக்
பிள்ளைகள்3

ஜகந்நாத் மல்லிக் (Jagannath Mallick) (10 ஜூலை 1937 - 7 ஆகஸ்ட் 2016) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார் . அவர் ஆரம்பத்தில் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகவும், வேளாண்மை மற்றும் கூட்டுறவு அமைச்சராக ஒடிசாவில் பணியாற்றினார்.[1]

வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

மல்லிக் ஒரிசாவின் பாட்னாவில் பிறந்து வளர்ந்தார். புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் மற்றும் கூட்டுறவு கல்வியில் உயர் பட்டயப்படிப்பையும் முடித்தார். அவர் சமூகப் பணிகளில் தீவிரமாக பங்கேற்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். [2]

தொழில்[தொகு]

1971 முதல் 1994 வரை ஒரிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த மல்லிக், பிரகதி சட்டமன்றக் கட்சியுடன் இணைந்தபோது 1978 முதல் 1980 வரை மற்றும் ஒரிசா மாநிலத்தின் 1990 முதல் 1994 வரை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1999 ல் அவர் பிஜு ஜனதா தளம் கட்சியினால் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனது முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இந்தியாவின் பதின்மூன்றாவது பொதுத் தேர்தலின் போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருந்தார். [3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மல்லிக் 7 ஜூலை 1957 இல் கல்யாணி மல்லிக் என்பவரை மணந்தார், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். [2]

இறப்பு[தொகு]

மல்லிக் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார், பின்னர் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சில நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இருப்பினும், ஏப்ரல் 7, 2016 அன்று, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக அவர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இறந்தார். [3]

குறிப்புகள்[தொகு]

  1. "Former Odisha Minister Jagannath Mallick passes away". OdishaSunTimes.com. 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  2. 2.0 2.1 "Members : Lok Sabha". Parliament of India, Lok Sabha. 2020-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  3. 3.0 3.1 "Former Odisha Agriculture Minister Jagannath Mallick No More". ommcomnews.com. 2020-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகன்னாத்_மல்லிக்&oldid=3072432" இலிருந்து மீள்விக்கப்பட்டது