ஜகந்நாத் கௌசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகந்நாத் கௌசல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1980–1989
முன்னையவர்கிருஷண் காந்த்
பின்னவர்ஹர்மோகன் தவான்
தொகுதிசண்டிகர்
9வது பீகார் ஆளுநர்
பதவியில்
16 ஜூன் 1976-31 ஜனவரி 1979
முன்னையவர்இராமச்சந்திர தோண்டிபா பண்டாரே
பின்னவர்கே. பி. என். சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952-1964
தொகுதிபஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1915-04-23)23 ஏப்ரல் 1915
பட்டியாலா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு31 மே 2001(2001-05-31) (அகவை 86)[1]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்காந்த கௌசல்
பிள்ளைகள்3 மகன்கள், 6 மகள்கள்
மூலம்: [1]

ஜெகநாத் கௌசல் (Jagannath Kaushal) (23 ஏப்ரல் 1915 - 31 மே 2001) இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த அரசியல்வாதியாவார். 1982 முதல் 1985 வரை இந்திய அரசாங்கத்தில் சட்ட அமைச்சராக இருந்தார். 1936 இல் லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1937 இல் பாட்டியாலாவில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். 1947இல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அரசு பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் இவர் 1949இல் தனது பதவியை விட்டு விலகினார். மீண்டும் சட்டப் பயிற்சிக்குத் திரும்பினார்.

ஆளுநர்[தொகு]

1976 மற்றும் 1979 க்கு இடையில் பீகார் ஆளுநராக இருந்தார். 1980 இல், இவர் சண்டிகரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 1982 முதல் 1985 வரை மத்திய சட்ட அமைச்சராக இருந்தார்.

பிறா பணிகள்[தொகு]

25 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த இவர் மக்களவையின் சலுகைகள் குழுவின் தலைவராக இருந்தார். சட்ட அமைச்சராக, இவர் ஜமைக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கடல்களின் சட்ட மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்து கொண்டார். மேலும், இந்தியா சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றங்களில், மரியாதை நிமித்தமாக இவர் இறந்த நாளில் வேலை நிறுத்தப்பட்டது.[2][3][4][5]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha Debates References Made To The Passing Away". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
  2. "Jagannath Kaushal Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 26 July 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  3. "List of Previous Governors". Bihar Government Website. Archived from the original on 4 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "OBITUARY Jagannath Kaushal: Law was his first love". The Tribune. 1 June 2001. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  5. R. C. Bhardwaj (1994). Legislation by Members in the Indian Parliament. Allied Publishers. பக். 210–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7023-409-8. https://books.google.com/books?id=XXj69CpMnF4C&pg=PA210. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகந்நாத்_கௌசல்&oldid=3572833" இலிருந்து மீள்விக்கப்பட்டது