ஜகஜித் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜகஜித் கவுர்
Jagjit Kaur.jpg
2016இல் ஜகஜித் கவுர்
பின்னணித் தகவல்கள்
பிறப்புமார்ச்சு 8, 88(88-03-08) [1]
பிறப்பிடம்பஞ்சாப் (இந்தியா)
இறப்பு15 ஆகத்து 2021(2021-08-15) (அகவை 90–91)
இசை வடிவங்கள்நாட்டுப்புற பாடல், கசல் (இசை), பின்னணி
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1950 முதல் 1990 வரை

ஜக்ஜித் கவுர் (Jagjit Kaur[2] 1930 – 15 ஆகத்து 2021) ஓர் இந்திய இந்தி / உருது பாடகராவார். இவர் இசையமைப்பாளர் முகமது சாகுர் கயாமின் துணைவியாவார். இவரது சமகாலத்தவர்களான லதா மங்கேஷ்கர்,ஆஷா போஸ்லே ஆகியோரை விட இவர் படங்களுக்கு குறைவான பாடல்களையேப் பாடியுள்ளார். ஆனாலும் இவரது பாடல்கள் அனைத்தும் மறக்கமுடியாத தலைசிறந்த படைப்புகளாக விவரிக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கவுர் பஞ்சாபிலிருந்து ஒரு பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1954 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் முகமது சாகுர் கயாமை மணந்தார். இது இந்திய திரைப்படத் துறையில் முதல் கலப்பின திருமணங்களில் ஒன்றாகும். இவர்களுக்கு பிரதீப் என்ற மகன் இருந்தார். இவர் 2012 ல் மாரடைப்பால் இறந்துவிட்டார். தங்கள் மகனின் உதவி செய்யும் இயல்பால் ஈர்க்கப்பட்ட இவர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவ "கயாம் ஜக்ஜித் கவுர் கேபிஜி அறக்கட்டளை" என்ற அறக்கட்டளையைத் தொடங்கினர். [3] ஜகஜித் கவுர் 2019 ஆகஸ்ட் 19 அன்று மாரடைப்பால் தனது 92 வயதில் காலமானார். [4]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகஜித்_கவுர்&oldid=3279196" இருந்து மீள்விக்கப்பட்டது