ச. வெ. கிருட்டிணா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ச. வெ. கிருட்டிணா ரெட்டி
படிமம்:Krishnareddy.jpg
பிறப்புசத்தி வெங்கட கிருட்டிணா ரெட்டி
1 சூன் 1961 (1961-06-01) (அகவை 60)
கொங்குதூரு, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1991—தற்போது வரை
அறியப்படுவதுகாதல் நகைச்சுவைப்படங்கள்
விருதுகள்தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
நந்தி விருது
வலைத்தளம்
http://www.svkrishnareddy.com

சத்தி வெங்கட கிருட்டிணா ரெட்டி (Satti Venkata Krishna Reddy) ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும், இசையமைப்பாளரும் ஆவார். தெலுங்குத் திரைப்படத்துறை, தமிழகத் திரைப்படத்துறை, ஹாலிவுட், பாலிவுட் ஆகியவற்றில் இவரது படைப்புகளுக்கு முக்கியமாக அறியப்பட்டவர். இவர் மூன்று மாநில நந்தி விருதுகளையும், சிறந்த தெலுங்கு இயக்குனருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார் . [1] [2] [3] [4] 1997இல் வெளிவந்து பெரிய வெற்றிப் பெற்ற அமெரிக்க தழுவலான டைவர்ஸ் இன்விடேசன் என்ற அமெரிக்க படத்தின் தழுவலான அக்வானம் என்ற காதல் நகைச்சுவைப்படத்தை 2012 ஆம் ஆண்டில் இயக்கியுள்ளார் . [5] [6]

திரை வாழ்க்கை[தொகு]

கிராதகடு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். மாயலோடு (1993), இராஜேந்திரடு கஜேந்திரடு (1993), யமலீலா (1994), சுபலக்னம் (1994), தக்தீர்வாலா (1995), கடோத்கஜடு (1995), மாவிச்சிகுரு (1996) வினோதம் (1996), எகிரே பாவூரம்மா (1997), ஜுடாய் (1997), பெல்லி பீட்டலு (1998), பிரேமக்கு வேலயாரா (1999), சககுடும்ப சபரிவார சமேதம் (2000), பிரேமக்கு சுவாகதம் (2002), பெல்லம் ஓலெல்லிதே (2003), ஹங்காமா, மாயாஜாலம், யமலீலா 2 (2014) போன்ற வெற்றிப் படங்களில் இவர் மிகவும் பிரபலமானவர். [7] [8]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொங்குதூரு கிராமத்தில் பிறந்தார். பீமாவரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, ஐதராபாத்து சென்று கோபரி போந்தம் படத்திற்கு திரைக்கதையை எழுதியதன் மூலம் திரையுலகில் நுழைந்தார். [7]

மேற்கோள்கள்[தொகு]