ச. வெ. இராமன் உலகப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. வெ. இராமன் உலகப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைபுத்தாயிரம் ஆண்டில் தரமான கல்வி
Quality Education for New Millennium
வகைதனியார்
உருவாக்கம்1997 (1997)
தலைவர்சன்ஜிப் கு. ரெளத்
முதல்வர்பாபேசு பட்டாச்சார்யா
அமைவிடம்புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
20°13′14″N 85°44′11″E / 20.220493°N 85.736457°E / 20.220493; 85.736457ஆள்கூறுகள்: 20°13′14″N 85°44′11″E / 20.220493°N 85.736457°E / 20.220493; 85.736457
வளாகம்பித்யாநகர், மகுரா, ஜன்லா, புவனேசுவரம்
சேர்ப்புபிஜூ பட்நாயாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, தேசிய அங்கீகார வாரியம்
இணையதளம்cgu-odisha.ac.in
பல்கலைக்கழக வளாகம்

ச. வெ. இராமன் உலகப் பல்கலைக்கழகம் (C. V. Raman Global University) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகும். இது 1997-ல் ச. வெ. இராமன் பொறியியல் கல்லூரியாக ச. வெ. இராமன் குழுமத்தின் கீழ் சஞ்சிப் குமார் ரௌட்டால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகாரமும் ஐ. எசு. ஓ. 9001:2000 தரச் சான்றிதழும் பெற்றுள்ளது.[1]

இந்த நிறுவனம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுமத்தின் "ஏ" தரமும் பெற்றுள்ளது.[2] மேலும் இது பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 29 பிப்ரவரி 2020 அன்று, இக்கல்லூரிக்குப் பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் ச. வெ. இராமன் உலகப் பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது.

கல்வி[தொகு]

இயந்திரவியல் கட்டிடம்

இக்கல்லூரி நான்கு வருட இளநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளையும்[3] மற்றும் இரண்டு வருட முதுநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு திட்டங்களையும் வழங்குகிறது.[4] அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ஒப்புதலுடன் இணை நுழைவுத் திட்டத்தின் கீழ் பட்டய படிப்பு முடித்தவர்கள் கணினி பயன்பாடுகளில் மூன்றாண்டு முதுநிலை பட்டப்படிப்பு, முதுகலை வணிக மேலாண்மை ஆகிய இரண்டு ஆண்டு முதுகலை மற்றும் மூன்றாண்டு தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பாடப்பிரிவுகள் பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஒரிசா மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி குழுவின் கீழ் பல்வேறு துறைகளில் மூன்று ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது.[5]

தரவரிசைகள்[தொகு]

ச. வெ. இராமன் பொறியியல் கல்லூரி, புவனேசுவரம், 2021-ல் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பின் பொறியியல் கல்லூரிகளில் 100வது இடத்தைப் பிடித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Recognition of CVRCE". CVRCE. 2 March 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "NAAC accredition". CVRCE. 2 March 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "CVRCE Courses". CVRCE. 24 January 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "PG courses". CVRCE. 24 January 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://State_Council_for_Technical_Education_%26_Vocational_Training

வெளி இணைப்புகள்[தொகு]