உள்ளடக்கத்துக்குச் செல்

ச. ஜோசப் விஜய் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
27வது அமைச்சரவை - தமிழ்நாடு
2026–தற்போது வரை
உருவான நாள்10 மே 2026
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்ச. ஜோசப் விஜய்
நாட்டுத் தலைவர்இராசேந்திர அர்லேகர்
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை
  • 121
    • தவெக+ 116
    • வெளிப்புற ஆதரவு மற்றும் நம்பிக்கை 5
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
எதிர் கட்சி தி.மு.க.   
எதிர்க்கட்சித் தலைவர்உதயநிதி ஸ்டாலின்[1]
வரலாறு
தேர்தல்(கள்)2026
சட்டமன்றப் பதவிக்காலம்2026–தற்போது வரை
முந்தையமு. க. ஸ்டாலின் அமைச்சரவை

ச. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையானது, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, 17-வது தமிழ்நாடு சட்டமன்றம் அமைக்கப்பட்ட நிலையில், 2026 மே 10 அன்று தமிழ்நாட்டின் 9வது முதலமைச்சராகப் பதவியேற்ற, ச. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையாகும்.[2][3]

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசுடன் அக்கட்சி கூட்டணி அமைத்தது. தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தன. இதன் மூலம் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடிந்தது.

2026-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், ஆளுநர் இராசேந்திர அர்லேகர், விஜய் மற்றும் அமைச்சரவையின் மற்ற ஒன்பது அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 1967-க்குப் பிறகு, திராவிடக் கட்சியைச் சாராத ஒரு கட்சியால் வழிநடத்தப்படும் அரசு தமிழ்நாட்டில் அமைந்தது இதுவே முதல் முறையாகும்.[4] பின்னர், அதே நாளில் (மே 10, 2026), விஜய் திருச்சி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டுப் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார், இதன் மூலம் சட்டமன்றத்தில் தவெக கட்சியின் பலம் ஒன்று குறைந்தது. மே 21, 2026 அன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.[5][6] அடுத்த நாள், இஒமுலீ மற்றும் விசிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் மேலும் இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் இணைந்தனர்.[7]

அமைச்சர்கள் சபை (10 மே 2026 - தற்போது வரை)

[தொகு]
வ. எண் பெயர் புகைப்படம் தொகுதி துறை(கள்) கட்சி பதவிக் காலம்
பதவி ஆரம்பம் கால அளவு
முதலமைச்சர்
1 சி. ஜோசப் விஜய்
பெரம்பூர் தவெக 10 மே 2026 117 நாட்கள்
அமைச்சர்கள்
2 புஸ்சி ஆனந்த்
தியாகராயநகர் தவெக 10 மே 2026 117 நாட்கள்
3 ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம்
4 கே. ஜி. அருண்ராஜ்
திருச்செங்கோடு
5 கே. ஏ. செங்கோட்டையன்
கோபிச்செட்டிப்பாளையம்
6 பி. வெங்கடரமணன்
மயிலாப்பூர்
7 சி. டி. ஆர். நிர்மல் குமார் Centre திருப்பரங்குன்றம்
  • மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு
  • சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்பு
  • சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
8 ராஜ்மோகன் ஆறுமுகம் எழும்பூர்
  • பள்ளிக் கல்வி
  • தொல்லியல்
  • தமிழ் அதிகாரப்பூர்வ மொழியும் தமிழ் கலாச்சாரமும்
  • தகவல் மற்றும் விளம்பரம்
  • திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுப் பிரிவு சட்டம்
  • செய்தித்தாள் கட்டுப்பாடு
  • எழுதுபொருள் மற்றும் அச்சிடுதல்
  • அரசு பத்திரிகை
9 டி. கே. பிரபு காரைக்குடி
10 எஸ். கீர்த்தனா சிவகாசி
11 பி. விஸ்வநாதன் மேலூர் இதேகா 21 மே 2026 106 நாட்கள்
12 எஸ். ராஜேஷ்குமார் கிள்ளியூர்
13 ஏ. எம். ஷாஜஹான் பாபநாசம்
  • சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம்
இஒமுலீ 22 மே 2026 105 நாட்கள்
14 வன்னி அரசு திண்டிவனம் விசிக
15 விஜய் தமிழன் பார்த்திபன் சேலம் தெற்கு
  • மோட்டார் வாகனச் சட்டங்கள் – நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டம்
தவெக 21 மே 2026 106 நாட்கள்
16 பி. ராஜ்குமார் கடலூர்
  • வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரத் திட்டமிடல் திட்டங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, தங்குமிடக் கட்டுப்பாடு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற மேம்பாடு
  • சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
17 வி. சம்பத் குமார் கோயம்புத்தூர் வடக்கு
  • பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்
18 ம. விஜய் பாலாஜி
ஈரோடு கிழக்கு
  • கைத்தறி மற்றும் ஜவுளித் துறை, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்
19 கே. விக்னேஷ் கினாத்துகடவு
20 தென்னரசு. கே ஸ்ரீபெரும்புதூர்
  • அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை
21 ஜே. முகமது ஃபர்வாஸ் ஆரந்தாங்கி
22 வி. காந்திராஜ் அரக்கோணம்
23 கே. ஜெகதீஸ்வரி இராஜபாளையம்
24 ஆர். வினோத் கும்பகோணம்
25 ச. விஜயலட்சுமி குமாரபாளையம்
26 டி. சரத்குமார் தாம்பரம்
27 எஸ். ரமேஷ்
திருவரங்கம்
28 பி. மதன்ராஜா ஒட்டப்பிடாரம்
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை
29 நா. மரிய வில்சன் ஆர். கே. நகர்
  • நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள், திட்டமிடல் மற்றும் மேம்பாடு
30 ஸ்ரீநாத் தூத்துக்குடி
31 செ. கமலி அவனாசி
32 இரா. குமார் வேளச்சேரி
  • செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
33 ஆர். வி. ரஞ்சித் குமார் காஞ்சிபுரம்
34 லோகேஷ் தமிழ்செல்வன்
இராசிபுரம்
35 இராஜீவ் திருவடானை

கட்சி வாரியாக அமைச்சர்கள்

[தொகு]
கட்சி அமைச்சர்களின் எண்ணிக்கை
தமிழக வெற்றிக் கழகம் 31
இந்திய தேசிய காங்கிரசு 2
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 1
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1
மொத்தம் 35

அமைச்சரவை மாற்றங்கள்

[தொகு]

21 மே 2026

[தொகு]

சான்றுகள்:[8][9]

பெயர் முந்தைய துறைகள் தற்போதைய துறைகள்
ச. ஜோசப் விஜய்
  • பொது
  • பொது நிர்வாகம்
  • இந்திய ஆட்சிப் பணி
  • இந்திய காவல் பணி
  • இந்திய வனப் பணி
  • மாவட்ட வருவாய் அலுவலர்கள்
  • காவல்
  • உள்துறை
  • சிறப்புத் திட்ட செயலாக்கம்
  • மகளிர் நலன்
  • இளைஞர் நலன்
  • குழந்தைகளின் நலன்
  • முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
  • நகராட்சி நிர்வாகம்
  • நகர்ப்புறம் மற்றும் நீர் வழங்கல்.
  • பொது
  • பொது நிர்வாகம்
  • இந்திய ஆட்சிப் பணி
  • இந்திய காவல் பணி
  • இந்திய வனப் பணி
  • மாவட்ட வருவாய் அலுவலர்கள்
  • காவல்
  • உள்துறை
  • சிறப்புத் திட்ட செயலாக்கம்
  • சிறப்பு முன்னெடுப்புகள்
  • வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புறக் கடன் சுமை
  • இளைஞர் நலன்
  • குழந்தைகளின் நலன்
  • முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
  • நகராட்சி நிர்வாகம்
  • நகர்ப்புறம் மற்றும் நீர் வழங்கல்.
ந. ஆனந்த்
  • கிராமப்புற வளர்ச்சி
  • பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
  • வறுமை ஒழிப்புத் திட்டம்
  • கிராமப்புறக் கடன் சுமை
  • நீர்ப்பாசனம்
  • சிறு பாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்.
  • கிராமப்புற வளர்ச்சி
  • பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
  • நீர்ப்பாசனம்
  • சிறு பாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்.
சி. டி. ஆர். நிர்மல் குமார்
  • மின்சாரம்
  • மரபுசாரா எரிசக்தி மேம்பாடு
  • சட்டம்
  • நீதி
  • சிறை
  • ஊழல் தடுப்பு
  • சட்டமன்றத்துறை (தமிழ்நாடு)
  • ஆளுநர்
  • தேர்தல்கள்
  • கடவுச்சீட்டுகள்
  • மின்சாரம்
  • மரபுசாரா எரிசக்தி மேம்பாடு
  • சட்டம்
  • நீதி
  • சிறை
  • ஊழல் தடுப்பு
  • ஆளுநர்
  • தேர்தல்கள்
  • கடவுச்சீட்டுகள்
கே. ஏ. செங்கோட்டையன்
  • நிதி
  • ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியப் படிகள்
  • வருவாய்
  • மாவட்ட வருவாய் நிறுவனம்
  • துணை ஆட்சியர்கள்
  • பேரிடர் மேலாண்மை
  • பூதன்
  • கிராமதன்
  • சட்டமன்றத்துறை (தமிழ்நாடு)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "In Tamil Nadu Assembly, it’s Vijay versus Udhayanidhi". தி இந்து. 10 May 2026. https://www.thehindu.com/news/national/tamil-nadu/udhayanidhi-stalin-dmk-leader-of-opposition/article70962587.ece#google_vignette.
  2. "Tamil Nadu government formation: Left backs TVK but VCK undecided as uncertainty continues" (in en-IN). தி இந்து. 8 May 2026. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-government-formation-cpi-cpim-extend-unconditional-support-to-tvk-vck-may-follow-suit/article70954927.ece.
  3. "VCK, IUML extend unconditional support to Vijay’s TVK; alliance with DMK intact, says Thirumavalavan" (in en-IN). தி இந்து. 9 May 2026. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-government-formation-vck-iuml-extend-unconditional-support-to-vijays-tvk/article70958929.ece.
  4. "Vijay ushers in new political era in Tamil Nadu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 May 2026. https://timesofindia.indiatimes.com/india/tvk-ends-dmk-aiadmk-era-actor-politician-vijay-sworn-in-as-tamil-nadu-chief-minister/articleshow/130986441.cms.
  5. "Vijay expands his cabinet, inducts 23 new ministers including two from Congress". டெக்கன் ஹெரால்டு. 21 May 2026. https://www.deccanherald.com/india/tamil-nadu/tamil-nau-cm-vijay-expands-his-cabinet-inducts-23-new-ministers-including-two-from-congress-4010823.
  6. "Meet the 23 new Ministers in Tamil Nadu CM Vijay's Cabinet expanded on May 21, 2026". தி இந்து. 21 May 2026. Archived from the original on 27 May 2026. Retrieved 27 May 2026.
  7. "VCK and IUML on board Vijay's cabinet". தி இந்து. 22 May 2026. https://www.thehindu.com/news/national/tamil-nadu/with-vck-vanni-arasu-and-iuml-shahjahan-on-board-vijays-cabinet-in-tamil-nadu-now-has-35-ministers/article71009135.ece.
  8. "Vijay cabinet expansion: 21 TVK and 2 Congress MLAs among 23 ministers to take oath today". என்டிடிவி. 21 May 2026. https://www.ndtv.com/india-news/vijay-cabinet-expansion-21-tvk-2-congress-mlas-among-23-ministers-to-take-oath-today-11525941.
  9. "Congress joins TVK alliance". தி இந்து. 21 May 2026. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-cabinet-expansion-live-congress-joins-tvk-alliance-may-21-2026-tn/article71004811.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ஜோசப்_விஜய்_அமைச்சரவை&oldid=4609395" இலிருந்து மீள்விக்கப்பட்டது