ச. சவிதா
ச. சவிதா | |
---|---|
![]() | |
அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சூன் 2024 | |
ஆளுநர் | எசு. அப்துல் நசீர் |
முன்னையவர் | செல்லுபொளனியா சிறீனிவாச வேணுகோபாலகிருஷ்ணா |
ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சூன் 2024 | |
ஆளுநர் | எசு. அப்துல் நசீர் |
முன்னையவர் | புதியது |
கைத்தறி துறை அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சூன் 2024 | |
ஆளுநர் | எசு. அப்துல் நசீர் |
முன்னையவர் | ஜெகன் மோகன் ரெட்டி (முதலமைச்சர்) |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | மலகுண்டல சங்கரநாராயணா |
தொகுதி | பெனுகொண்டலா |
சஞ்சீவரெட்டிகரி சவிதா (S. Savitha)(பிறப்பு: பிப்ரவரி 10, 1977) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] இவர் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக 2024 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] சூன் 2024-இல், இவர் நா. சந்திரபாபு நாயுடுவின் நான்காவது அமைச்சரவையில் அமைச்சராகச் சேர்க்கப்பட்டார்.[3][4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சவிதா முந்தைய அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டாவில் சோமண்டேபள்ளி இராமச்சந்திர ரெட்டிக்கு மகளாகப் பிறந்தார். இவர் 1998-ஆம் ஆண்டு அனந்தபூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணதேவராய பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[5]
அரசியல்
[தொகு]சவிதா 2024 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இவர் 1,13,832 வாக்குகளைப் பெற்று, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் கு. வி. உசாசிறீ சரணை 33,388 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[7] சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் இவருக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலன், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரின் நலன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆகிய துறைகள் வழங்கப்பட்டன.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Benjamin, Ravi P. (2024-04-16). "Two women fighting to capture Penukonda". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-11.
- ↑ "Penukonda Constituency Election Results 2024: Penukonda Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Andhra Pradesh Cabinet Ministers List 2024: Pawan Kalyan, Nara Lokesh among 24 ministers in Chandrababu Naidu's Cabinet". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-12. Retrieved 2024-06-12.
- ↑ Sridhar, G. Naga (2024-06-12). "Chandrababu Naidu sworn in as Andhra Pradesh CM, Pawan Kalyan becomes Minister". BusinessLine (in ஆங்கிலம்). Retrieved 2024-06-12.
- ↑ "S. Savitha(TDP):Constituency- PENUKONDA(ANANTAPUR) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-04.
- ↑ "Penukonda Assembly Election Results 2024: Penukonda Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "S Savitha, TDP Candidate from Penukonda Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-11.
- ↑ "TDP has always accorded priority to welfare of BCs, says Minister Savitha". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-has-always-accorded-priority-to-welfare-of-bcs-says-minister-savitha/article68942605.ece.