ச. அங்குச்சாமி
தோற்றம்
ச. அங்குச்சாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | கரியமாணிக்கம் அம்பலம் |
| பின்னவர் | கே. சொர்ணலிங்கம் |
| தொகுதி | திருவாடனை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1940 தேவக்கோட்டை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அதிமுக |
| பிள்ளைகள் | 3 |
| வாழிடம் | கட்டவெள்ளையன் தெரு, தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
| தொழில் | விவசாயம் |
ச. அங்குச்சாமி (S. Anguchamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் 1940ஆம் ஆண்டு பிறந்த அங்குச்சாமி, தேவகோட்டையில் பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த விவசாயியான அங்குச்சாமி, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருவாடனைச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் இப்பதவியினை 1984ஆம் ஆண்டு வரை வகித்துள்ளார்.[1]