ச‌‌த்‌தியபாமா‌

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ருக்மணி, சத்யபாமா மற்றும் கருடனுடன் கிருஷ்ணரின் பஞ்சலோக சிற்பம்

சத்யபாமா திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவர்.

 • இவர் பூமாதேவியின் அம்சமாக கருதப்பெறுகிறார். ஒரு பெண்ணால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன் எனும் அரக்கன் வரம் பெற்றிருந்ததாகவும்,
 • அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் ச‌‌த்‌யபாமா‌விற்கு தேரோட்டியாக கிருஷ்ணன் பாரதகிருஷ்ணராக சென்று நரகாசுரனை வதம்புரிந்ததார்
 • நரகாசுரன் பிரக்ஜோதிஷ்பூர் என்ற நாட்டை ஆண்டு கொண்டு அங்குள்ள மக்கள்களையும், பெண்களையும், தேவர்களையும், பஞ்சபூதங்களையும் தனது சர்வதிகார ஆட்சியில் கொடுமை செய்து வந்தான்.
 • இதில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்யும் முறையயை (சிவந்த பஞ்சகம்) என்றும் தமிழில் சிவந்தமண்களம் என்று கூறபடுகின்றது.
 • இந்த வதத்தில் நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் ஐந்து முறை முயற்சிகிறார். இதை பஞ்சவியூக முறை என்று கூறபடுகின்றது.
 • முதலில் நரகாசுரனின் நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பலை கிருஷ்ணர் தனது அக்னி அஸ்திரத்தால் அந்த கப்பலை கடலில் கவிழ்த்துவிட்டார்.
 • அடுத்ததாக தேவர்களையும், பஞ்சபூதங்களையும் தனது வசபடுத்தி வைத்திருந்த நரகாசுரனின் இடம் இருந்து மீட்டேடுத்தார் கிருஷ்ண பரமாத்மா
 • மேலும் நாட்டு மக்கள்களையும், பெண்களையும் அடிமைவிலங்கை நீக்க நினைத்தபோது கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவை பேரழகியாக அலங்கரித்து நரகாசுரனின் முன்பு நடனம் ஆட செய்து கிருஷ்ணர் சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஆடவைத்து ஒரு அடிமை நாடகம் போல் நடத்தினார் கிருஷ்ணர். (இதனால் தான் இன்றளவும் தீபாவளி தினத்தன்று சாட்டையில் நெருப்பு வைத்து கொண்டாட படுகின்றது) இந்த நிகழ்வை கண்ட நரகாசுரன் தனது இறப்பு நேருங்கியதை கண்டு அச்சமுற்ற போதிலும் சத்யபாமாவின் அழகை கண்டு தனது நிலையயை மாற்றி கொண்டு அந்த அடிமையாக இருந்த மக்கள்களையும், பெண்களையும் விடுவித்தான்.
 • பின்பு போர்களத்தில் சண்டையின் போது கிருஷ்ணருக்கும்-நரகாசுரனுக்கும் போர் நடந்தபோது போர்களத்தின் பூமியே இரத்தத்தால் சிவந்து கிடந்தது.
 • இறுதியில் கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவின் கையால் தான் நரகாசுரனை அழிக்க கடைசி முறையாக நரகாசுரன் அம்பு மழை பொழிதான் இதில் கிருஷ்ணர் தந்திரமாக விலகி கொண்டு அந்த அம்புகள் எல்லாம் மனைவி சத்யபாமாவை நோக்கி பாய்ந்து அவள் நெஞ்சை அம்பு குத்திவிட்டது. அந்த வலியயையும் பொருட்படுத்தாமல் அந்த அம்பினை நெஞ்சில் இருந்து இரத்தம் சிந்த எடுத்து அந்த அம்பாலயே நரகாசுரனை குத்தி வதம் செய்துவிட்டால் என்று வைணவ நூல்கள் கூறுகிறது. [1]

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. http://www.ammandharsanam.com/magazine/Deepavali2009unicode/page020.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச‌‌த்‌தியபாமா‌&oldid=2824369" இருந்து மீள்விக்கப்பட்டது