ச்றீ ராதா ரமணர் கோவில், விரிந்தாவனம்
| ச்றீ ராதா ரமணர் கோவில் | |
|---|---|
விரிந்தாவனத்தில் உள்ள ராதா ரமணர் கோவில் நுழைவாயில் | |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம்: | மதுரா |
| அமைவு: | விரிந்தாவனம் |
| ஆள்கூறுகள்: | 27°35′7.335″N 77°41′55.56″E / 27.58537083°N 77.6987667°E |
| கோயில் தகவல்கள் | |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | ராஜஸ்தானி கட்டிடக்கலை |
| வரலாறு | |
| அமைத்தவர்: | கோபால பட்ட கோஸ்வாமி |
| இணையதளம்: | http://www.radharamanmandir.com/ |
ச்றீ ராதா ரமணர் கோவில் (இந்தி: श्री राधारमण मन्दिर) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள விரிந்தாவனத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்து கோவில் ஆகும். இக்கோவில் கிருஷ்ணரை ராதா ரமணர் என்ற பெயரில் வழிபடும் கௌடிய வைணவ மரபைச் சேர்ந்த கோவிலாகும். இது விரிந்தாவனத்தின் ஏழு முக்கிய பழமையான கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் கோபால பட்ட கோஸ்வாமியால் நிறுவப்பட்ட புனித சாளக்கிராம வடிவில் தோன்றிய ராதா ரமணர் மூர்த்தி உள்ளது.[1][2]
வரலாறு
[தொகு]ராதா ரமணர் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோபால பட்ட கோஸ்வாமி அவர்களால் நிறுவப்பட்டது.[3] கௌடிய வைணவ மரபின்படி, கோபால பட்ட கோஸ்வாமி நேபாளத்தின் காளி கண்டகி ஆற்றில் நீராடியபோது பல சாளக்கிராம சிலைகளைப் பெற்றார். பின்னர் அவற்றை வழிபட்டு வந்தார். ஒரு பௌர்ணமி நாளில், அவர் வழிபட்ட சாளக்கிராமங்களில் ஒன்றிலிருந்து புல்லாங்குழல் ஏந்திய கிருஷ்ணரின் அழகிய திருமேனி தோன்றியதாக நம்பப்படுகிறது. அந்த மூர்த்தியே ராதா ரமணர் என அழைக்கப்படுகிறது.[4] கோவிலின் சமையலறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் கோஸ்வாமி குடும்ப உறுப்பினர்களால் தயாரிக்கப்படுகிறது. கோவிலில் கோபால பட்ட கோஸ்வாமியின் சமாதியும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.salagram.net/sstp-RadhaRamanVrindavan.html The history of Sri Radha Raman Temple
- ↑ Anand, D. (1992). Krishna: The Living God of Braj. Abhinav Publications. p. 103. ISBN 978-81-7017-280-2.
- ↑ "Home". Sri Radha Raman. http://www.radharaman.org/.
- ↑ Hawley, John C. (1992). At Play with Krishna: Pilgrimage Dramas From Brindavan. Motilal Banarsidass Pub. pp. 4–5. ISBN 81-208-0945-9.