சௌராஷ்டிர சகாப்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌராஷ்டிர சகாப்தம் அல்லது சௌராஷ்டிர விஜயாப்தம் சௌராட்டிரர்கள் தங்களின் பூர்விக இடமான சௌராட்டிர தேசத்திலிருந்து வெளியேறி, தேவகிரியில் 300 ஆண்டுகள்வாழ்ந்த பின்னர் விசயநகரப் பேரரசில் குடியேறிய ஆண்டான கி. பி., 1312-ஆம் ஆண்டு முதல் சௌராஷ்டிர சகாப்பதம் துவங்குகிறது.

தமிழ் நாட்காட்டியின்படி சித்திரை மாதம் முதல் நாள் சௌராஷ்ட்டிரர்களின் புத்தாண்டு துவங்குகிறது. 14-03-2013 முதல் 13-04-2014 முடிய உள்ள காலம் முடிய சௌராஷ்ட்டிர சகாப்தம் 701 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

சௌராஷ்டிர சகாப்தம் எவ்வாறு துவக்கப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் நடைமுறையில் சௌராட்டிர புரோகிதர்களால் கணிக்கப்படும் பஞ்சாங்கங்களில் சௌராஷ்டிர சகாப்த ஆண்டை தவறாது குறித்து வருகின்றனர்.

சித்திரை மாதம் முதல் நாளையே சௌராட்டிரர்கள் தங்களின் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். சௌராட்டிரர்கள் தங்கள் திருமண அழைப்பிதழ்களிலும் இதர மங்கல அழைப்பிதழ்களிலும் சௌராஷ்ட்டிர சகாப்த ஆண்டை தவறாது குறிக்கின்றனர்.

நூல் உதவி[தொகு]

  • சௌராஷ்டிரர் முழு வரலாறு, நூலாசிரியர், கே. ஆர்., சேதுராமன், மதுரை

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராஷ்டிர_சகாப்தம்&oldid=3367920" இலிருந்து மீள்விக்கப்பட்டது