சௌராஷ்டிரா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சௌராஷ்டிரா கல்லூரி, (Sourashtra College) சௌராட்டிர மொழிவாரி சிறுபான்மை சமூகத்தவர்களால், சௌராட்டிர மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல்கலைக்கழக புகுமுக வகுப்புகளுடன் (Pre-University Courses) மட்டும் 1967-இல் மதுரையில் துவக்கப்பட்டது.[1] உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழு மற்றும் எட்டு பேர்கள் கொண்ட நிர்வாக்க் குழுவினரால் இக்கல்லூரி நிர்வாகிக்கப்படுகிறது. கல்லூரி தொடங்கிய ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர் இளங்கலை பட்டப்படிப்புகள் துவக்கப்பட்டது. இக்கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரியாகும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்து பின் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.[2]

தமிழக அரசின் கொடை[தொகு]

அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் ஆணையின்படி, மதுரை, பசுமலை மலையின் அடிவாரத்தில் உள்ள விளாச்சேரி கிராமத்தில் புதிய கல்லூரிக் கட்டிடங்கள் கட்ட தமிழ்நாடு அரசு 28.12 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கியது.[3]

கல்லூரியின் வளர்ச்சி[தொகு]

நாட்டிய நாடக கலை நிகழ்ச்சிக்கான நன்கொடை ரசீது


சௌராட்டிர சமூகத்தவர்கள் அளித்த நன்கொடைகள் மற்றும் நாட்டிய நாடக கலை நிகழ்ச்சிகள் மூலம் வசூலித்த நன்கொடைகள் மூலம் கல்லூரிக் கட்டிடங்கள் உருவாயின. 1972-ஆம் ஆண்டு முதல் விளாச்சேரியில் அமைந்த புதிய கட்டிடங்களில் கல்லூரி இளங்கலை பட்டப்படிப்புகளுடன் செயல்படத் துவங்கியது. [4].

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியல்
  • கணிதம்
  • கணினி பயன்பாடு

கலை மற்றும் வர்த்தகம்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளாதாரம்
  • வர்த்தகம்


முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்புகள்[தொகு]

1981 ஆம் ஆண்டு முதல் முதுகலை பட்டமேற்படிப்புகள் துவங்கின. ஆண்கள் மட்டும் பயிலும் இக்கல்லூரியில் 1984-ஆம் ஆண்டு முதல் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 2005-ஆம் ஆண்டு முதல் வணிகவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) படிப்புகளும் மற்றும் வணிகவியல் பாடத்தில் முனைவர் பட்டப் படிப்பு (Ph. D) துவங்கியது. [5]2011-ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு முதல் சுயநிதி படிப்புகள் இக்கல்லூரி வளாகத்தில் தனியாக தொடங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராஷ்டிரா_கல்லூரி&oldid=3072304" இருந்து மீள்விக்கப்பட்டது