சௌராட்டிரம் (இராகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சௌராஷ்டிர இராகம் 17வது மேளகர்த்தா இராகமாகிய சூர்யகாந்தத்தின் ஜன்ய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் வியாழக்குறிஞ்சி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. பக்தி சுவை மிக்க சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.

இலக்கணம்[தொகு]

ஆரோகணம்: ஸ ரி131 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம1 க ம ரி1

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3) சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்[தொகு]

 • இது ஒரு சம்பூர்ண இராகம். வக்ர இராகம்.
 • அவரோகணத்தில் மத்யமம் ச நி தா பமகம என்று வக்ரமாக இடம்பெறுகிறது .ஆதலால் இது ஒரு வக்ர இராகம் ஆகும்.
 • அந்நிய சுரமான கைசிகி நிஷாதம் ‘ப த நி த பா ’ என்னும் பிரயோகத்தில் வருகிறது
 • இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது

உருப்படிகள்[தொகு]

தேவாரம்[தொகு]

 • பந்தத்தால் திருஞானசம்பந்தர் ஆதி தாளம்

கிருதி[தொகு]

 • ஸ்ரீ கணபதினி தியாகராஜர், ஆதி தாளம்
 • அல்ல கல்லோல தியாகராஜர், ஆதி தாளம்
 • ஏமனி நேரநம்மு தியாகராஜர், சாபு தாளம்
 • ஏநோமு தெலியக தியாகராஜர், சாபு தாளம்
 • கும கும குமயணி தியாகராஜர், மிஸ்ரசாபு தாளம்
 • எந்நாடோ ரக்ஷிம்சுடே தியாகராஜர், ஆதி தாளம்
 • பாஹி ராம ஹரே தியாகராஜர், ரூபக தாளம்
 • ராம ராம கோவிந்தா தியாகராஜர், ஆதி தாளம்
 • கால சம்ஹார கருணாகர தியாகராஜர், ஆதி தாளம்
 • சூர்ய மூர்த்தே முத்துஸ்வாமி தீட்சிதர் துருவ தாளம்
 • நின்னு ஜூசி பட்டணம் சுப்பிரமணிய ஐயர் ஆதி தாளம்
 • எங்கே தேடி கோபால கிருஷ்ண பாரதியார் ஆதி தாளம்
 • விநாயகா சரணம் அருணாசலக் கவிராயர் ஆதி தாளம்
 • சரணம் சரணம் அருணாசலக் கவிராயர் சாபு தாளம்
 • என் செய்வோமென நகரம் முத்துசாமிக் கவிராயர் ஆதி தாளம்
 • அருள்கின்றதெப்பொழுது இலட்சுமணப் பிள்ளை ஆதி தாளம்
 • மங்களமே சுப மங்களமே பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்
 • சகல கலாநாயிகே பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்
 • மந்திர வடிவனோ பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்
 • வலசி வச்சியுன்னா பொன்னய்யாப்பிள்ளை , அட தாளம்
 • ரங்கநாதுடே ,பொன்னய்யாப் பிள்ளை , ஆதி தாளம்
 • கேசவ மாதவ கோவிந்தா ,புரந்தரதாசர் , ஆதி தாளம்
 • அம்ம நிம்ம மங்கள புரந்தரதாசர் , ஆதி தாளம்
 • பஞ்சவர்ணக்கிளி வேதநாயகம் பிள்ளை அட தாளம்
 • இந்த வழக்கு வேதநாயகம்பிள்ளை ஆதி தாளம்
 • இந்த மனம் வேதநாயகம் பிள்ளை ஆதி தாளம்
 • தினமும் நினை மனமே நீலகண்ட சிவன் , மிஸ்ர சாபு தாளம்
 • மங்களமே சுப மங்களமே பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்

பதம்[தொகு]

 • இகநின்னு நம்ம ராத க்ஷேத்ரக்ஞர் த்ரிபுட தாளம்
 • பரமகுல ஹ்ருதயம் ஸ்வாதித்திருநாள் ரூபக தாளம்
 • சுமுகி சுகமொடே ஸ்வாதித்திருநாள் ஆதி தாளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராட்டிரம்_(இராகம்)&oldid=2401805" இருந்து மீள்விக்கப்பட்டது