சௌமியகேசவர் கோயில், நாகமங்கலம்

ஆள்கூறுகள்: 12°49′10″N 76°45′13″E / 12.81944°N 76.75361°E / 12.81944; 76.75361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌமியகேசவர் கோயில்
சௌமியகேசவர் கோயில், நாகமங்கலம்.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:மண்டியா
அமைவு:நாகமங்கலம்
ஆள்கூறுகள்:12°49′10″N 76°45′13″E / 12.81944°N 76.75361°E / 12.81944; 76.75361
கோயில் தகவல்கள்

சௌமியகேசவர் கோயில் (Saumyakeshava temple) என்பது 12 ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசின் ஆட்சியாளர்களால் நாகமங்கலத்தில் கட்டப்பட்ட இந்து கோயிலாகும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்-சிரா நெடுஞ்சாலையில், 62 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது. [1] வரலாற்று ரீதியாக, போசள மன்னர் விஷ்ணுவர்தனனின் ஆட்சியின் போது நாகமங்கலம் முக்கியத்துவம் பெற்றது. இது வைணவ நம்பிக்கையின் ஒரு முக்கிய மையமாக மாறியது. மேலும் அவரது ராணிகளில் ஒருவரான பொம்மலாதேவியிடமிருந்து ஆதரவைப் பெற்றது. இரண்டாம் வீர வல்லாளனின் ஆட்சியின் போது, நாகமங்கலம் ஒரு அக்ரகாரமாக இருந்ததுடன், மரியாதைக்குரிய வீர வல்லாள சதுர்வேதி பட்டரத்னாகரம் என்ற பெயரையும் கொண்டிருந்தது. [2] தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இந்த கோயில் பாதுகாக்கப்படுகிறது. [3]

கோயில் திட்டம்[தொகு]

நாகமங்கலம், சௌமியகேசவ கோவிலின் நுழைவு கோபுரம்.

கலை வரலாற்றாசிரியர் ஆடம் ஹார்டியின் கூற்றுப்படி, சன்னதியின் அடிப்படை திட்டம் நட்சத்திர வடிவம் ஆகும். இது ஜகதி என்ற பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில், சோப்புக்கல் பொருட்களால் கட்டப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர் பெர்சி பிரவுனின் கூற்றுப்படி இது ஒரு ஹொய்சாலா பாணியில் அமைந்துள்ளது. [4] ஒட்டுமொத்தமாக, இந்த கோயில் நாகஹள்ளி, சதாசிவா கோயில் போன்ற வேறு சில ஹொய்சாலா கோயில்களில் காணப்படும் நாகரா அம்சங்களை (வட இந்திய பாணி) காட்சிப்படுத்துகிறது. [5] கலை வரலாற்றாசிரியர்களான ஜெரார்ட் ஃபோகேமா மற்றும் பெர்சி பிரவுன் கருத்துப்படி, ஹொய்சாலா கோயில்களில் நாகரா அம்சங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. [6] [7] இந்த கோயில் ஒரு பெரிய கட்டமைப்பாகும். இது பல வம்சங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது மற்றும் பிற்கால விஜயநகர சாம்ராஜ்யத்தின் அம்சங்களை வெளிப்படுத்துகிறது. அதன் ஆட்சியாளர்கள் அதன் மேல் நுழைவாயிலையும், கோபுரத்தையும் எல்லைச் சுவர்கள் எனப்படும் பிரகாரத்தையும் சேர்த்துள்ளனர். விஜயநகர பேரரசிற்கு பிந்தைய சில அம்சங்களும் இக்கோயிலில் காணப்படுகிறது. நுழைவாயிலுக்கு மேலே உள்ள கோபுரம் 7 மாடி உயரமான சுண்ணாம்பு மற்றும் செங்கல் அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு, இந்து கடவுளர்களின் உருவங்கள் சுவர் பூச்சுக்கான சாந்துவைப் பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது. [2]

நாகமங்கலத்தில் உள்ள சௌமியகேசவ கோவிலில் உள்ள மண்டபம் மற்றும் கருவறையின் பார்வை

இக்கோவில் மூன்று பகுதிகளாக உள்ளது. [8] ஒரு கர்ப்பக்கிருகம், முன் கூடம், பெரிய தூண்களைக் கொண்ட ஒரு திறந்த மண்டபம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பெர்சி பிரவுன் மற்றும் ஜெரார்ட் ஃபோகேமா ஆகியோரின் கூற்றுப்படி, இவை ஹொய்சாலா பாணி கோவிலின் தரமான அம்சங்கள் எனப்படுகிறது. [7] [9] மூடிய மண்டபத்தில் இரண்டு பக்கவாட்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் உள்ளது. கிழக்கே, பெரிய மண்டபம் நடைமேடையுடன் இணைகிறது. இது பக்தர்களால் கோயிலைச் சுற்றி வருவதற்கு ஏதுவாக உள்ளது. ஏனெனில் கோயிலின் உள்ளே இதுபோன்ற எந்த அம்சமும் இல்லை. [4] [10] சன்னதியின் விமானம் வழக்கமான அலங்காரமின்றி கோயிலுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. [2] கோயிலில் காணப்படும், இந்து மத கடவுளின் வடிவம் விஷ்ணு, கருடன் பீடத்தில் காட்சியளிக்கிறார். [11] மூடிய மண்டபத்தின் கூரையானது ஹொய்சாலா கட்டுமானங்களில் ஒரு நிலையான அம்சமான லேத் டர்ன் தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. [12] [13]

சௌமியகேசவ கோவிலில் உள்ள மண்டபத்தின் மேற்புரத்தில் காணப்படும் அலங்கார வளைவு.

குறிப்புகள்[தொகு]

  1. B.L. Rice (1887), p.286
  2. 2.0 2.1 2.2 "Saumyakeshava Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 22 May 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
  3. "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 1 April 2013.
  4. 4.0 4.1 Brown in Kamath (2001), p.135
  5. Hardy (1995), p.339
  6. Foekema (1996), p.29
  7. 7.0 7.1 Brown in Kamath (2001), p.134
  8. Typically trikuta means three shrines each with a tower, though quiet often only the central shrine has a superstructure, Foekema (1996), p.25
  9. Foekema (1996), pp. 21-25
  10. Foekema (1996), p.25
  11. Foekema (1996), p.20
  12. Kamath (2001), p.135
  13. Foekema (1996), p.22