சௌமன் சென்
சௌமன் சென் (Soumen Sen, பிறப்பு ஜூலை 27,1965) ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.[1] இதற்கு முன்பு, இவர் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2] இதைத்தவிர இவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார். அங்கு இவர் அதன் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.[3]
இளமை வாழ்க்கை
[தொகு]நீதிபதி சௌமன் சென் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தாவின் செயின்ட் லாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்த்ல் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1991 ஆம் ஆண்டில் மேற்கு வங்காள வழக்கறிஞர் மன்றத்தில் வழக்கறிஞராகச் சேர்ந்தார்.
தொழில்
[தொகு]ஓர் வழக்கறிஞராக இவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூல மற்றும் மேல்முறையீட்டுப் பிரிவுகளிலும், பிற நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களிலும் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார். உரிமையியல், அரசியலமைப்பு, வங்கி மற்றும் நடுவர் மன்ற வழக்குகள் உட்படப் பலதரப்பட்ட விஷயங்களில், இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி போன்ற அதிகார அமைப்புகளுக்காக வாதாடினார்.[4]
நீதிபதியாக
[தொகு]13 ஏப்ரல் 2011 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அப்போதைய தலைமை நீதிபதி டி. எஸ். சிவஞானம் 15 செப்டம்பர் 2025 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[5]
11 செப்டம்பர் 2025 அன்று, தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்தது.[6] 26 செப்டம்பர் 2025 அன்று மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 8 அக்டோபர் 2025 அன்று சில்லாங்கில் உள்ள ஆளுநர் இலத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்.[7]
18 டிசம்பர் 2025 அன்று, தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், இவரை கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப் பரிந்துரைத்தது.[8] இதற்கு 1 ஜனவரி 2026 அன்று அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.[9] இவர் 10 ஜனவரி 2026 அன்று பதவியேற்றார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jennath, K. Salma (2026-01-10). "Justice Soumen Sen Sworn-In As Chief Justice Of Kerala High Court". www.livelaw.in (in ஆங்கிலம்). Retrieved 2026-01-10.
- ↑ Ahuja, Sonali (2025-09-29). "President appoints Justice Soumen Sen as Chief Justice of Meghalaya High Court". SCC Times (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-05.
- ↑ "Chief Justice and Judges – Calcutta High Court".
- ↑ "Calcutta High Court: Major Reshuffle in Benches of Calcutta High Court, Know about 32000 Teacher Case – WBPAY.IN" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-07-17. Retrieved 2025-09-12.
- ↑ "Justice Soumen Sen named Acting Chief Justice of Calcutta HC". www.punjabnewsexpress.com. Retrieved 2025-09-15.
- ↑ Singh, Ratna (2025-09-11). "Supreme Court Collegium recommends appointment of Justice Soumen Sen as Meghalaya High Court CJ". Bar and Bench – Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2025-09-12.
- ↑ www.ETLegalWorld.com. "Justice Soumen Sen sworn in as Chief Justice of Meghalaya High Court". ETLegalWorld.com (in ஆங்கிலம்). Retrieved 2025-12-19.
- ↑ "Supreme Court Collegium Recommends Transfer of Justice Soumen Sen as Chief Justice of Kerala High Court – Law Trend" (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-12-18. Retrieved 2025-12-19.
- ↑ "Order of transfer as Chief Justice of Kerala High Court" (PDF).
- ↑ "Soumen Sen sworn in as new Chief Justice of Kerala High Court" (in en-IN). The Hindu. 2026-01-10. https://www.thehindu.com/news/national/kerala/soumen-sen-sworn-in-as-new-chief-justice-of-kerala-high-court/article70493925.ece.