சௌந்தர்யா ரஜினிகாந்த்
தோற்றம்
சௌந்தர்யா ரஜினிகாந்த் | |
|---|---|
| பிறப்பு | சக்கு பாய் ராவ் கெய்க்வாட் 20 செப்டம்பர் 1984 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | கணினி வரைகலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போதுவரை |
| பெற்றோர் | ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் |
| வாழ்க்கைத் துணை |
|
| பிள்ளைகள் | வேத் கிருஷ்ணா அஸ்வின் (பி.2015) |
செளந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth, இயற்பெயர்: சக்கு பாய் ராவ் கெய்க்வாட். பிறப்பு: 20 செப்டம்பர் 1984) [1][2] முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரின் தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குநராக அறிமுகமானார்.
திரைப்படங்கள்
[தொகு]வரைகலை வடிவமைப்பு
[தொகு]| வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |
|---|---|---|
| 1999 | படையப்பா | தலைப்பு மட்டும் |
| 2002 | பாபா | தலைப்பு மட்டும் |
| 2005 | அன்பே ஆருயிரே | |
| மஜா | ||
| சண்டக்கோழி | ||
| சந்திரமுகி | தலைப்பு மட்டும் | |
| 2006 | சிவகாசி | |
| 2007 | சென்னை 600028 | |
| சிவாஜி | தலைப்பு மட்டும் | |
| 2014 | கோச்சடையான் | இயக்கமும் |
தயாரிப்பு
[தொகு]| வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |
|---|---|---|
| 2010 | கோவா |
இயக்கம்
[தொகு]| வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |
|---|---|---|
| 2014 | கோச்சடையான்' | வரைகலை வடிவமைப்பாளராகவும் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ குப்தா, பிரியா (12 செப்டம்பர் 2013). "My mom is the boss: Soundarya Rajnikanth". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/My-mom-is-the-boss-Soundarya-Rajnikanth/articleshow/22487545.cms. பார்த்த நாள்: 12 September 2013.
- ↑ "Rajinikanth wore a traditional marathi turban during his daughter's marriage". Dnaindia.com. Retrieved 2013-09-12.
