சௌந்தட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌந்தட்டி
சவதட்டி
நகரம்
சவதட்டி கோட்டை
சவதட்டி கோட்டை
சௌந்தட்டி is located in கருநாடகம்
சௌந்தட்டி
சௌந்தட்டி
கர்நாடகாவில் சவதட்டியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°47′00″N 75°07′00″E / 15.7833°N 75.1167°E / 15.7833; 75.1167ஆள்கூறுகள்: 15°47′00″N 75°07′00″E / 15.7833°N 75.1167°E / 15.7833; 75.1167
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெல்காம்
பரப்பளவு
 • மொத்தம்16 km2 (6 sq mi)
ஏற்றம்610 m (2,000 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்38,155
 • அடர்த்தி2,384.69/km2 (6,176.3/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்591 126
தொலைபேசி இணைப்பு எண்08330
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ
வாகனப் பதிவுகேஏ-24

சௌந்தட்டி (Saundatti) கன்னட மொழியில் சவதட்டி எனவும் அழைக்கப்படும் [1] இது இந்திய மாநிலத்தில் ஒன்றான கர்நாடகாவிலுள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது பெல்காமிலிருந்து 78 கி.மீ. தொலைவிலும், தார்வாட்டிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற யாத்திரை மையமாகும். சவதட்டி என்பது வட்டத்தின் (துணை மாவட்டம்) பெயராகும். இதற்கு முன்னர் இது பராஸ்காட் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு மேலும் பல பழங்கால கோவில்களும் உள்ளன.

இராஷ்டிரகூட மன்னர்களின் வரலாறு[தொகு]

சவதட்டியின் வரலாற்று பெயர் சுகந்தவர்த்தி "சௌகந்திபுரம்" என்பதாகும். இராஷ்டிரகூட வம்சத்தின் கிளை வம்சமான இராட்டா வம்சத்தின் தலைநகரம் பெல்காமுக்கு மாற்றப்படும் வரை இந்நகரம் தலைநகராக இருந்தது (875-1230) . [2]

  • பன்னிரெண்டாம் மற்றும் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில், பெலகான் ( பெல்காம் ) [3] இராட்டாக்களின் தலைநகராக இருந்தது. பெல்காமில் உள்ள கோட்டை 1204இல் பிச்சிராஜா (இராட்டா வம்சம்) என்பவரால் கட்டப்பட்டது.
  • இராஷ்டிரகூடர்களின் பல கிளைகளில் இராட்டா குலமும் ஒன்றாகும்.
  • சௌந்தட்டியின் இராட்டர்கள் இரண்டாம் தைலாவின் ஆட்சியை (கி.பி. 973-977) ஏற்றுக்கொண்டனர்.
  • பெல்காம் கோட்டையில் உள்ள இரண்டு தூண்களில் தேவநாகரி எழுத்துக்களில் கன்னட கல்வெட்டுகள் உள்ளன. சுமார் பொ.ச.1199ஆம் ஆண்டு தேதியிட்ட ஒரு கல்வெட்டு இராட்டா மன்னர் கார்த்தவீரியனுக்கு பெயரிடப்பட்டுள்ளது. .
  • சௌந்தட்டியின் இராட்டர்கள் தொடர்பான கல்வெட்டுகளில் ஒன்றில், மூன்றாம் கிருஷ்ணன் பிருத்விராமன் என்பவனை ஒரு தலைமை நிலப்பிரபுவாக நியமித்திருப்பது [4] இரட்டா வம்சத்தை கண்ணியப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமண மதம்[தொகு]

  • சௌந்தட்டியின் இராட்டாக்கள் சமணத்தை பின்பற்றினார்கள் [5] .
  • 11 ஆம் நூற்றாண்டில் இவர்களின் மாகாண ஆளுநர்களும் சமண மதத்தின் சிறந்த புரவலர்களாக இருந்தனர். [6] கார்த்தவிரியன் என்பவனின் மகனும், ஒரு சமணத் துறவியுமான முனிச்சந்திரா, இலட்சுமிதேவனுக்கு அமைச்சரும், ஆசிரியரும், இரட்டா-இராச்சியத்தின் நிறுவனரும், ஆச்சார்யா என்ற பட்டத்தை கொண்டவருமான இருந்துள்ளார்.
  • இங்கு இரு சிறிய சமணக் கோயில்களும் இருந்தன.

சுற்றுலா[தொகு]

சௌந்தட்டி கோட்டை, கர்நாடகா
கோட்டையில் உள்ள கடசித்தேசுவரர் கோயில்
ரேணுகா ஏரி, சௌந்தட்டி, கர்நாடகா
எல்லம்மா கோயில், சௌந்தட்டி, கர்நாடகா
சௌந்தட்டி அருகிலுள்ள நவில தீர்த்தம்,

சவதட்டி கோட்டை[தொகு]

18 ஆம் நூற்றாண்டின் சிரசாங்கி தேசாய் என்பவர் இங்கு 8 கொத்தளங்களுடன் ஒரு கோட்டையைக் கட்டினார். கோட்டையில் நான்கு கொத்தளங்களால் சூழப்பட்ட கடசித்தேசுவரர் கோயில் உள்ளது. பிரகாரத்தின் உள்ளே இருநூறுக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளுடன் வடிவியல் வடிவங்களின் செதுக்கல்கள் உள்ளன. சிலவற்ருக்கு வர்ணங்களும் பூசப்பட்டுள்ளன.

ரேணுகா சாகரம்[தொகு]

ரேணுகா சாகரம் (ஏரி) என்பது சௌந்தட்டியை ஒட்டியுள்ள மலப்பிரபா ஆற்றை ஒட்டியுள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது நவிலுதீர்த்த அணையால் உருவாக்கப்பட்டது. எல்லம்மா குட்டாவில் உள்ள ரேணுகா (எல்லம்மா) கோயிலின் தெய்வத்தின் பெயரிடப்பட்டுள்ளாது.

எல்லம்மாகுட்டா[தொகு]

எல்லம்மா அல்லது ரேணுகா தெய்வத்தின் கோயில் சக்தி பக்தர்களுக்கான புனித யாத்திரை தளமாகும். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.

நவிலுதீர்த்தம்[தொகு]

நவிலுதீர்த்த அணையால் உருவாக்கப்பட்ட ரேணுகா சாகரம் (ஏரி), இங்கு தாழ்வான பகுதிகளைத் தொடுகிறது. இங்கே ஜோகுல்லபாவி என்று ஒரு இடம் உள்ளது. அங்கு ஒரு கோயில் உள்ளது. எல்லம்மா மலையை பார்வையிடுவதற்கு முன்பு யாத்ரீகர்கள் இங்கு புனித நீராடுகிறார்கள். இந்த சமாதி (கல்லறை) இராமாபூர் பகுதியில் உள்ளது.

புகைப்படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சௌந்தட்டி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Savadatti". 2012-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Chapter XIV, Karnataka, The Tourist Paradise". 2009-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Belgaum". 2009-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  4. "The Rattas (Rashtrakutas) of Saundatti". 2009-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  5. "JAINISM IN SOUTH INDIA". 2009-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Kollapur District Gazetteer, JAINS". 2009-03-18 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌந்தட்டி&oldid=3556361" இருந்து மீள்விக்கப்பட்டது