உள்ளடக்கத்துக்குச் செல்

சௌத் கா பர்வாரா

ஆள்கூறுகள்: 26°03′04″N 76°08′10″E / 26.051085°N 76.1361334°E / 26.051085; 76.1361334
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌத் கா பர்வாரா
ChauthKaBarwara
சௌத் கா பர்வாரா ChauthKaBarwara is located in இராசத்தான்
சௌத் கா பர்வாரா ChauthKaBarwara
சௌத் கா பர்வாரா
ChauthKaBarwara
சௌத் கா பர்வாரா ChauthKaBarwara is located in இந்தியா
சௌத் கா பர்வாரா ChauthKaBarwara
சௌத் கா பர்வாரா
ChauthKaBarwara
ஆள்கூறுகள்: 26°03′04″N 76°08′10″E / 26.051085°N 76.1361334°E / 26.051085; 76.1361334
நாடு இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்சவாய் மாதோபூர்
அரசு
 • சர்பன்சுசீதா தேவி
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்14,038
மக்கள்தொகையியல்
 • இந்தியாவில் படிப்பறிவு69.28
 • பாலின விகிதம்937

சௌத் கா பர்வாரா (ChauthKaBarwara) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் இருக்கும் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்குள்ள சௌத் மாதா கோயிலுக்காகவும் இக்கிராமம் அறியப்படுகிறது.[2][3][4]

சௌத் கா பர்வாரா நகரம் இராசத்தானின் தோங்கு-சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த நகரத்தின் சட்டமன்றத் தொகுதி கந்தர் ஆகும். இங்குள்ள சௌத் மாதா கோயில் இராசத்தான் மாநிலம் முழுவதும் பிரபலமானது. சௌத் கா பர்வாரா நகரம் ஆரவல்லி மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ளது. இது மீனா மற்றும் குர்ச்சார் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும். பர்வாரா என்ற பெயரில் பிரபலமான இந்த சிறிய நகரம், சம்வத்து 1451ஆம் ஆண்டில் சௌத் மாதாவின் பெயரில் சௌத் கா பர்வாரா என்று பிரபலமாகி இன்றுவரை தொடர்கிறது. சௌத் மாதா கோயிலைத் தவிர, இந்த நகரத்தில் குர்ஜார்கள் மற்றும் லார்ட் மீனின் புரவலரான பகவான் சிறீ தேவ்நாராயண் கோயிலும் உள்ளது. சௌத் மாதா அறக்கட்டளை தர்மசாலா அனைத்து மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் தங்குவதற்கு ஒரு முக்கியமான இடமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Census Handbook 2011 – Sawai Madhopur" (PDF). Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  2. "Vicky Kaushal's face lights up as he sees bride Katrina Kaif for the first time, watch". https://indianexpress.com/article/entertainment/bollywood/vicky-kaushal-first-look-at-bride-katrina-kaif-inside-photo-from-wedding-7671888/. 
  3. "KarvaChauth 2018: Unique is the Chauth Mata Temple of Barwara". https://m.jagran.com/lite/spiritual/mukhye-dharmik-sthal-know-about-famous-chauth-mata-temple-sawai-madhopur-on-karwa-chauth2018-18574493.html#aoh=16411317498973&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s. 
  4. "Due to the heritage hotel, the barwada of Chauth came in the headlines across the country". https://www.patrika.com/sawai-madhopur-news/due-to-the-heritage-hotel-the-barwada-of-chauth-came-in-the-headlines-7162403/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌத்_கா_பர்வாரா&oldid=4339483" இலிருந்து மீள்விக்கப்பட்டது