சௌச்சல சோட்டா கோவிந்த மந்திர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோட்டா கோவிந்தா கோவில், புதியா வளாகம்

சௌச்சல சோட்டா கோவிந்த மந்திர் (Chauchala Chhota Govinda Mandir) என்பது வங்காளதேசத்தின் ராச்சாகி கோட்டத்தில் உள்ள புதியா உபசீலாவில் உள்ள புதியா கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஓர் இந்து கோவிலாகும். இக்கோயில் 1790-1800 ஆம் ஆண்டுகளில் இருந்ததாக கருதப்படுகிறது. [1][2]

ராச்சாகி நகரத்திலிருந்து 32 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புதிய நகரத்தில் இக்கோவில் உள்ளது இந்த நகரம் இரயில் மூலம் அணுகும் வகையிலும் டாக்கா ராச்சாகி நெடுஞ்சாலையிலும் உள்ளது. [3]

சிறப்பம்சங்கள்[தொகு]

சோட்டா கோவிந்த மந்திர் கோவில் பாரா அக்னிக் மந்திர் அருகில் பிரமிட் வடிவ பெட்டகத்தால் மூடப்பட்ட உயரமான மேடையில் உள்ளது. கோவிலின் உட்புறம் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் தாழ்வாரங்களுடன் கூடிய ஓர் அறை உள்ளது. [2] தெற்கு முகப்பு சுடுமண் தகடுகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. விசுணுவின் பத்து அவதாரங்கள் , காவியமான இராமாயண புராணத்தின் ஒரு அத்தியாயமான லங்காகண்டம், ராதா - கிருஷ்ண காவியக் கதைகள், மலர் வடிவமைப்புகள், வடிவியல் கலை மற்றும் அந்தக் காலத்திய குடிமை வாழ்க்கையின் காட்சிகளை இத்தகடுகள் சித்தரிக்கின்றன. மேற்கில் உள்ள முகப்பில் சுடுமண் அலங்காரப் பலகைகள் உள்ளன. அவற்றில் சில பாழடைந்த நிலையில் அல்லது பாழடைந்த நிலையில் உள்ளன. [2]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahmumuda, Alam (2013). Puthia temple complex: Developing tourism through architecture (pdf) (Bachelor of Architecture). BRAC University. p. 30. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
  2. 2.0 2.1 2.2 "Puthia Rajbari". Chauchala Chhota Govinda Mandir. Rajshahi University Web Page. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link). Chauchala Chhota Govinda Mandir. Rajshahi University Web Page. Archived from the original பரணிடப்பட்டது 2015-05-18 at the வந்தவழி இயந்திரம் on 18 May 2015. Retrieved 13 May 2015.
  3. Bangladesh. https://books.google.com/books?id=TT2z_1ajY4AC&pg=PA301.