உள்ளடக்கத்துக்குச் செல்

சௌகோரி

ஆள்கூறுகள்: 29°50′28″N 80°01′50″E / 29.84124°N 80.030594°E / 29.84124; 80.030594
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌகோரி
चौकोरी
நகரம்
Himalayan range Chaokori.jpg
சௌகோரி
சௌகோரி is located in உத்தராகண்டம்
சௌகோரி
சௌகோரி
உத்தராகண்டம் மாநிலத்தில் சௌகோரியின் அமைவிடம்
சௌகோரி is located in இந்தியா
சௌகோரி
சௌகோரி
சௌகோரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°50′28″N 80°01′50″E / 29.84124°N 80.030594°E / 29.84124; 80.030594
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமாவுன்
மாவட்டம்பிதௌரகர்
பரப்பளவு
 • மொத்தம்8.3618 km2 (3.2285 sq mi)
ஏற்றம்
2,010 m (6,590 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்1,163
 • அடர்த்தி140/km2 (360/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
சமசுகிருதம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஉகே 05
இணையதளம்uk.gov.in

சௌகோரி (Chaukori) என்பது பிதௌரகர் மாவட்டத்திலுள்ள ஒரு மலை வாழிடமாகும். இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் குமாவுன் பிரிவில் மேற்கு இமயமலைத் தொடரின் உயரமான சிகரங்களில் அமைந்துள்ளது. இதன் வடக்கே திபெத்தும், தெற்கே தெராயும் உள்ளது. மகாகாளி ஆறு, இதன் கிழக்கு எல்லையில் ஓடி, இந்திய-நேபாள சர்வதேச எல்லையை உருவாக்குகிறது. தற்போது இந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலா இடமாக மாறியுள்ளது. இங்கிருந்து இமயமலை எல்லையின் பரந்த மற்றும் அழகிய காட்சியைக் காணலாம். காலை நேரத்தில் இமயமலை வீச்சில் விழும் சூரிய கதிர்களின் தங்க மஞ்சள் நிறம் உண்மையில் பார்க்கத்தக்கது. அமைதியான சூழலில் ஒருவர் தங்கியிருந்து அனுபவிக்கக்கூடிய குடிசைகள் இங்கே உள்ளன. இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக அருகிலுள்ள சுற்றுலா இடங்களான படால் புவனேசுவர், கௌசானி, பாகேசுவர், அல்மோரா போன்ற இடங்களையும் பார்வையிடுகிறார்கள்.

நிலவியல்

[தொகு]

இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பிதௌரகர் மாவட்டத்தின் பெரினாக் வட்டத்தில் அமைந்துள்ளது. [3] இது துணை மாவட்ட தலைமையகமான பெரிநாக்கிலிருந்து [4] 10 கி.மீ தூரத்திலும், மாவட்ட தலைமையகம் பிதௌரகரிலிருந்து 86 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் உயரம் 2010 மீ ஆகும். மேலும், இது நந்தா தேவி, நந்தா கோட், பஞ்சசூலி போன்ற மலைகளில் பனி சிகரங்களின் கண்கவர் காட்சிகளைக் கொண்டுள்ளது .

புள்ளிவிவரங்கள்

[தொகு]

சௌகோரி ஒரு நடுத்தர அளவிலான கிராமமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு மொத்தம் 248 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதன் மொத்த மக்கள் தொகை 1163 ஆகும். இதில் 672 ஆண்களும், 491 பெண்களும் இருக்கின்றனர். [5][6] இங்கு, 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை190 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 16.34% ஆகும். இதன் சராசரி பாலியல் விகிதம் 731 இது மாநில சராசரி 963 ஐ விடக் குறைவு. இதன் குழந்தை பாலியல் விகிதம் 624, இது மாநில சராசரி 890 ஐ விட குறைவாக உள்ளது. மாநிலத்துடன் ஒப்பிடும்போது இங்கு கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. 2011 இல், இதன் கல்வியறிவு விகிதம் 76.36% ஆக இருந்தது.

கோயில்கள்

[தொகு]

35 கி.மீ தூரத்திலுள்ள கங்கோலிகாட் காளி கோயிலுடன் ஒரு முக்கியமான மத மையமாக உள்ளது. மேலும் இங்கு பல கோயில்களும் உள்ளன: [7]

போக்குவரத்து

[தொகு]

சௌகோரி குமாவுனிலுள்ள முக்கிய இடங்களுக்கு சாலைகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டம் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பாகேசுவர், பிதௌரகர், அல்மோரா, தார்ச்சுலா, தில்லி போன்ற நகரங்களுக்கு பேருந்துச் சேவையை வழங்குகிறது. பிற நகரங்கள் மற்றும் நகரங்களிலிருந்து தூரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. [8]

  • இங்கிருந்து தில்லி - 530 கி.மீ. தொலைவிலுள்ளது
  • கத்கோடம் - அல்மோரா மற்றும் பாகேசுவர் வழியாக198 கி.மீ. தொலைவிலுள்ளது.
  • நைனிடால் - 183 கி.மீ. தொலைவிலுள்ளது.

கத்கோடகம் இரயில் நிலையம் 198 கி.மீ. தொலைவிலுள்ளது

பட தொகுப்பு

[தொகு]
சௌகோரியிலிருந்து இமயமலையின் ஒரு பரந்த பார்வை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chaukori - Indian Village Directory". பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
  2. DCHB Pithoragarh Part-A (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
  3. "Chaukori Population - Berinag - Pithoragarh, Uttarakhand". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
  4. "Chaukori: Holiday Haven". Indiatravelogue. பார்க்கப்பட்ட நாள் 2006-10-18.
  5. "Chaukori Population - Berinag - Pithoragarh, Uttarakhand". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
  6. District Census Handbook - Pithoragarh, Part-B (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
  7. "Temples". pithoragarh,nic.in. Archived from the original on 7 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-10-18.
  8. "Chaukori". india.journeymart.com. பார்க்கப்பட்ட நாள் 2006-10-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகோரி&oldid=3213506" இலிருந்து மீள்விக்கப்பட்டது