சௌகான் விக்டோரியா வடை

சௌகான் விக்டோரியா வடை (Chauhan Victoria Vada) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள காமாக் தெரு வர்தான் சந்தையில் அமைந்துள்ள ஓர் உணவுக் கடையாகும்.[1][2][3][4]
உத்தரப் பிரதேசத்தின் இவுன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரிநாத் சௌகான் என்பவரால் 1950ஆம் ஆண்டில் இந்தக் கடை தொடங்கப்பட்டது. அவரது மகன் இராசேந்திர பிரசாத் சௌகான் இந்தக் கடையை முப்பதாண்டுகளாக நிர்வகித்து வந்தார். தற்போது அவரது பேரன்களான அனுராக்கு, பங்கசு, அபினவ் மற்றும் தீபக் சௌகான் ஆகியோர் இந்தக் கடையை நடத்தி வருகின்றனர்.
இராசத்தானி பருப்பு வடையைப் போன்ற ஒரு சிற்றுண்டியான விக்டோரியா வடைக்காக இவர்கள் அறியப்படுகிறார்கள். காலனித்துவத்திற்குப் பிந்தைய காலத்தில் பிரித்தானிய குடியிருப்பாளர்களிடையே இவ்வடை ஒரு பிரபலமான சிற்றுண்டியாக இருந்தது. 2013ஆம் ஆண்டில், பிரித்தானிய பிரதமர் டேவிட்டு கேமரன் இந்த உணவைச் சுவைப்பதற்காக சௌகான் விக்டோரியா வடை கடைக்கு வருகை தந்தார்.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vardaan Market's Victoria Vada: The magic of the mortar and pestle".
- ↑ "Spice trail leads to roadside Victoria Vada". www.telegraphindia.com. Retrieved 2022-07-18.
- ↑ "One for the road: Vada bite at 'Victoria' stall". The Times of India (in ஆங்கிலம்). 15 November 2013. Retrieved 2022-07-18.
- ↑ Lobo, Joanna (2018-10-12). "From the by-lanes of Kolkata" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/life-and-style/food/from-the-by-lanes-of-kolkata/article25208276.ece.
- ↑ "When British PM David Cameron feasted on spicy treats in Kolkata". www.ndtv.com (in ஆங்கிலம்). November 14, 2013. Retrieved 2024-09-25.
- ↑ "Cameron relishes daal vada on Kolkata streets". Hindustan Times (in ஆங்கிலம்). 2013-11-16. Retrieved 2022-07-18.
- ↑ "David Cameron relishes Indian cuisines on his visit to Kolkata! (view pics)". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2013-11-15. Retrieved 2022-07-18.