சோ. பால்ராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோ. பால்ராசு (S. Paulraj) என்பவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் பிரபலமாக சோ. பா. என்று அழைக்கப்படுகிறார். இவர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (1989ஆம் ஆண்டு) மற்றும் திமுக தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக இருந்தார்.[1][2] இவரது தந்தை எஸ். ஆர். சோலை அழகுக் கோனார், மதுரையின் முக்கிய ஆளுமை ஆவார். மதுரையில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக மு. க. அழகிரி 2001 தேர்தலில் பணியாற்றியதால் திமுக சார்பில் போட்டியிட்ட பால்ராசு 143 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

இவர் ஐ.சி.எஃப் திமுக தொழிலாளர் சங்கத்தின் நிறுவனர் ஆவார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அறங்காவலராக பணியாற்றியுள்ளார். இவர் திமுகவின் நிறுவன உறுப்பினராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்கு முன்பு தென்னக இரயில்வேயில் பணியாற்றினார்.

இவருக்கு 5 உடன்பிறப்புகள் உள்ளனர். அவர்களில் சோ. சுந்தராசன் என்பவர் காவல்துறையில் விளையாட்டு அலுவலராகவும், இந்திய தேசிய காங்கிரசு விசுவாசியாகவும், சோ. தனுசுகோடி என்பவர் இந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) தேசிய உறுப்பினராகவும், சோ. நவநீதகிருட்டிணன் என்பவர் மதுரை மாநகர துணைத் தந்தையாகவும் மற்றும் அஇஅதிமுக மாவட்ட செயலாளராகவும், சோ. பரமநாதன் என்பவர் மாநிலச் செயலாளராக எம்.ஜி.ஆர் மன்றத்திலும் (அமமுக) இருந்தனர்.

பால்ராசுக்கு ஆனந்தவள்ளி, என்ற மனைவியும், கண்ணதாசன் என்ற மகனும் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். நீரழிவு நோய்க்கு சிகிச்சைபெற்று வந்த பால்ராசு 83வது அகவையில் மதுரையில் மே 4, 2015ஆம் ஆண்டு காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madurai Central Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Madurai Central, Tamil Nadu". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.
  2. "Cremation ground workers stage protest". The Hindu. 28 August 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/cremation-ground-workers-stage-protest/article1900418.ece. பார்த்த நாள்: 21 June 2015. 
  3. "திமுக முன்னாள் எம்எல்ஏ சோ.பால்ராஜ் காலமானார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._பால்ராசு&oldid=3203462" இலிருந்து மீள்விக்கப்பட்டது