சோ. கருணைநாதன்
தோற்றம்
சோ. கருணைநாதன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | பி. கவுடர் |
| பின்னவர் | க. அரங்கசாமி |
| தொகுதி | குன்னூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 மார்ச்சு 1928 தின்னியூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
சோ. கருணைநாதன் (J Karunainathan)(பிறப்பு மார்ச்சு 16, 1928) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் தின்னியூர் பகுதியினைச் சார்ந்தவர். இவர் ஜக்கனாரை அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். கருணைநாதன் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 1971 | குன்னூர் | திமுக | 33,451 | 58.15[2] |