சோ. இளமுருகனார்
Jump to navigation
Jump to search
சோ. இளமுருகனார் (ஜூன் 11, 1908 - டிசம்பர் 17, 1975, நவாலி, யாழ்ப்பாணம்) தமிழ் மரபு பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக விளங்கிய பண்டிதரவார். அரசியல் சார்பான தமிழுணர்ச்சி மிக்க ஆக்கங்களை ஆக்கியவர். நாடகாசிரியர், கண்டன ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மூத்த புதல்வர். நவாலியூர் சோ. நடராசனின் தமையனார். பண்டிதை பரமேஸ்வரியின் கணவர். வவுனியா பண்டிதர் சு. இராஜ ஐயனார் முதலானோரிடம் தமிழ் கற்றவர்.
இயற்றிய நூல்கள்[தொகு]
- செந்தமிழ்ச் செல்வம், 1957
- திருத்தண்ணச் சுந்தர புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம். இது பண்டிதை பரமேஸ்வரியாரின் உரையுடன் 1972 இல் வெளிவந்தது.
- உசன்பதித் திருமுருகன் கப்பற்பாட்டு (1961)
- திருமுருகாற்றுப்படைக்கு விளக்கவுரை