உள்ளடக்கத்துக்குச் செல்

சோஷோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிப்பி எனப்படும் குடில்களில் சோஷோன்கள் (1890 இல் எடுக்கப்பட்டது)
வயோமிங்கில் சோஷோன் இந்தியர்கள் (1892)
Rabbit-Tail

சோஷோன் (Shoshone) எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளாவர். இவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு சோஷோன்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக வாழ்கிறார்கள். இவர்களில் வடக்கு சோஷோன்கள் கிழக்கு இடாகோ, மேற்கு வயோமிங், மற்றும் வட-கிழக்கு யூட்டா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். கிழக்கு சோஷோன்கள் வயோமிங், வடக்கு கொலராடோ, மொன்டானா ஆகிய மாநிலங்களில் வசித்து வந்தார்கள். 1750ம் ஆண்டளவில் ஏனைய பழங்குடிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இவர்கள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்தார்கள். மேற்கு சோஷோன்கள் நடு இடாகோ, வடமேற்கு யூட்டா, நடு நெவாடா மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். இக்குழுவினர் பனாமிண்ட் (Panamint) என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு சோஷோன்களின் இடாகோ குழுவினர் டுக்குவாடுக்கா (Tukuaduka), அதாவது ஆடு தின்னிகள் எனவும், நெவாடா/யூட்டாக் குழுக்கள் கோசியூட் (Gosiute) அல்லது டோய் டிக்கூட்டா எனவும் அழைக்கப்படுகின்றனர்.

1845 இல் வடக்கு மற்றும் மேற்கு சோஷோன்களின் மொத்தத் தொகை கிட்டத்தட்ட 4,500 ஆக இருந்தது. 1937 இல் 3,650 வட சோஷோன்களும் 1,201 மேற்கு சோஷோன்களும் கணக்கெடுக்கப்பட்டார்கள்.

1860 இல் இடாகோ மாநிலத்தில் ஆங்கிலக் குடியேற்றவாசிகளுடன் இடம்பெற்ற மோதலில் (பெயார் ஆற்றுப் படுகொலைகள்) பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் 1876 இல் அவர்களது பரம்பரை எதிரிகளான லக்கோட்ட மற்றும் செயன் ஆகிய பழங்குடிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டார்கள். 1878 இல் பானொக் பழங்குடிகளுடன் இடம்பெற்ற சமரில் போரிட்டனர்.

1982 இல் மேற்கு சோஷோன்கள் தமது விடுதலையை அறிவித்து மேற்கு சோஷோன் தேசிய கவுன்சில் என்ற பெயரில் தனிக் கடவுச்சீட்டையும் வெளியிட்டார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Shoshoni
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோஷோன்&oldid=2755509" இலிருந்து மீள்விக்கப்பட்டது