சோவியத் ஒன்றியத்தின் நண்பர்கள் (இந்தியா, 1981)
சோவியத் ஒன்றியத்தின் நண்பர்கள் (இந்தியா, 1981) (Friends of the Soviet Union (India, 1981)) என்பது இந்தியாவில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும். தேசிய அரசியல் அரங்கில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கும் இந்திய தேசிய காங்கிரசுக்கும் இடையிலான முறிவுக்குப் பிறகு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த இந்தோ-சோவியத் கலாச்சார சங்கத்திற்கு மாற்றாக இந்திய தேசிய காங்கிரசு மற்றும் அகில இந்திய பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்களால் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.[1]
1981ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சோவியத் ஒன்றியத்தின் நண்பர்கள் அமைப்பின் தொடக்க மாநாட்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி உரையாற்றினார்.[2][3] தனது உரையில் இந்திரா காந்தி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி/இந்தோ-சோவியத் கலாச்சார சங்கத்தைக் கடிந்துகொண்டு, அவர்களை இந்திய-சோவியத் நட்பின் 'சுயமாக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள்' என்று அழைத்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhattacharya, Mrimoy in Banerjee, Gopal (ed.), S.A. Dange – A Fruitful Life. Kolkata: Progressive Publishers, 2002. p. 141
- ↑ Arundhati Roy (1987). The Soviet Intervention in Afghanistan: Causes, Consequences, and India's Response. Associated Publishing House. p. 104. ISBN 978-81-7045-006-1.
- ↑ 3.0 3.1 Andersen, Walter K.. India in 1981: Stronger Political Authority and Social Tension, published in Asian Survey, Vol. 22, No. 2, A Survey of Asia in 1981: Part II (Feb., 1982), pp. 119-135