சோவாவோ தே புசுமாந்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோவாவோ தே புசுமாந்தே (João de Bustamante) (பிறப்பு 1536 - ஆகஸ்ட் 23, 1588) ஒரு எசுப்பானிய மறைபரப்பாளர் ஆவார். இவர் 'இந்தியாவின் குட்டன்பெர்க்[1]' என்றும் அழைக்கப்பட்டார். இந்தியாவில், குறிப்பாக போர்த்துகீசிய காலனியான கோவாவில் அச்சகத்தை முதன் முதலாக தொடங்கி வைத்தவர்[2].

இந்தியாவில் அச்சு தொடங்குவதற்கான பங்களிப்பு[தொகு]

புசுமாந்தே எசுபானியாவின் வாலென்சியாவில் பிறந்தார். தன்னுடைய இருபதாவது வயதில் இயேசு சபையில் 1556 ஆம் ஆண்டு சேர்ந்தார். பின் சோவாவோ ரொடிரிக்சு என மறுபெயரிடப்பட்டு 1564 ஆம் ஆண்டு குருவாக நியமிக்கப்பட்டார். அவர் இயேசு சபை மறைபரப்பாளர்களுடன் இணைந்து போர்த்துக்கலில் இருந்து எத்தியோப்பியாவுக்கு (அப்போது அபிசீனியா) செல்லும் வழியில் ஒரு அச்சுப்பொறி திறனாளராக இந்தியா வந்தடைந்தார். கோவாவில் இருந்தபோது அபிசீனிய பேரரசருக்கு மறைபரப்பாளர்கள் மீது நல்லெண்ணம் இல்லை என்ற செய்தி வந்தது. அதே நேரத்தில், கோவாவில் உள்ள மதகுருமார்கள் அச்சகத்தின் தேவையை உணர்ந்து தங்களுக்கு அச்சகம் வேண்டுமென்று அப்போதைய ஆளுநரிடம் கோரினர்.

அச்சிடப்பட்ட படைப்புகள்  [தொகு]

மற்றவற்றுடன் இந்த நான்கு நூல்கள் புசுமாந்தேவால் அச்சிடப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது:

  • Conclusões e outras coisas (Theses and other things) - 1556.
  • Doutrina Christa by Francis Xavier - 1557.
  • Confecionarios - 1557.
  • Tratado contra os erros scismaticos dos Abexins (A Tract against the Schismatic Errors of the Abyssinians), கொன்சாலோ ரோட்ரிக்சு - 1560.

மேற்கோள்கள்[தொகு]

கூடுதல் மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவாவோ_தே_புசுமாந்தே&oldid=3366265" இலிருந்து மீள்விக்கப்பட்டது