உள்ளடக்கத்துக்குச் செல்

சோழவேங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bishop wood
சோழவேங்கை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicots
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Phyllanthaceae
சிற்றினம்:
Bischofieae
பேரினம்:
Bischofia
இனம்:
B. javanica
இருசொற் பெயரீடு
Bischofia javanica
Blume

சோழவேங்கை (Bischofia Javanica) என்பது ஒரு வகை மரமாகும். இதற்கு மலைப் பூவரசு, மிலச்சடையான், மூலா மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. இது பி பிலேகாபா பேரினத்தைச் சேர்ந்தது. இந்த இனத் தாவரமானது இந்தியா உள்ளிட்ட தெற்காசியா, தென்கிழக்கு ஆசியாவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் பொலினீசியாவரை பரந்துவிரிந்துள்ளன. இந்த மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரமான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. சோலைக் காடுகளில் மிகவும் வயதான மரங்களைக் காணலாம். இந்த மரங்கள் 12 முதல் 50 மீட்டர் உயரம்வரை வளரும். எப்போதும் பசுமையாகக் காணப்படும். பச்சை நிறத்தில் பூக்களும், பழங்கள் இளம் சிவப்பு பழுப்பு நிறத்தில் கொத்தாகவும் காணப்படும். இந்த மரங்கள் அதிகபட்சமாக 10 அடி விட்டமும், 20 அடி சுற்றளவும் கொண்டவையாக இருக்கும். இதைவிட அதிகச் சுற்றளவு கொண்ட மரங்கள் சில இடங்களில் காணலாம். தமிழ்நாட்டின் ஏற்காடு மலை அசம்பூர் கிராமத்தில் மணிவண்ணன் என்பவரின் தோட்டத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய ஒரு பழமையான சோழவேங்கை மரம் உள்ளது. இம்மரத்தின் தூண் பகுதியானது 15 மீட்டர் உயரம்வரை உள்ளது. அதன் பிறகே கிளைகள் பிரிகின்றன. மரத்தூண் பகுதியானது அடியில் பெருத்தும், மேலே செல்லச் செல்லப் புணல் வடிவிலும் உள்ளது. அடிப்பகுதி மிகவும் அகன்று அமைந்துள்ளது. தரையுடன் ஒட்டிய பகுதியின் சுற்றளவு 66 அடி கொண்டதாக, 10 பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவுக்கு இந்த மரம் மிகப் பெரியதாக உள்ளது. இந்த மரமே உலகிலேயே அதிகச் சுற்றளவு, விட்டம் கொண்ட சோழவேங்கை மரமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1] ஆசாம் காடுகளில் இந்த மரத்தைப் புலிகள் தங்கள் எல்லைப் பகுதியை வரையறுத்துக்கொள்வதற்காகக் கால் நகங்களால் மரத்தின் பட்டையைப் பிறாண்டிக் கீறுகின்றன. இம்மரங்களை தென்மேற்கு, நடு, கிழக்கு சீனாவிலும் தைவானிலும் வாழும் மக்கள் புனித மரமாக கருத்துகின்றனர்.[2][3]

பயன்கள்

[தொகு]
  • சிவப்பு நிறம் கொண்ட இந்த மரம் உறுதியானது. பாலங்கள் கட்டுவதற்கும், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் பழங்களைக் கொண்டு ஒயின் தயார்க்கப்படுகிறது.
  • இதன் விதைகளில் 30-54% எண்ணெய் கொண்டுள்ளது, இந்த எண்ணெய் உயவுப்பொருகாளப் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் பட்டையில் இருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கப்படுகிறது இந்தச் சாயத்தை பிரம்பு கூடை போன்றவற்றில் பூச பயன்படுத்தப்படுகிறது.[4]
  • இம்மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.[2]
  • இதன் இலைக் கொழுந்துகளை தெற்கு லாவோசில் மிளகாய் சாசில் தோட்டுக்கொண்டு உண்ணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஏற்காடு இளங்கோ (2ட17 ஏப்ரல் 1). "எல்லை வரையறுக்கப் புலிக்கு உதவும் மரம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 Hao Zheng; Yun Wu; Jianqing Ding; Denise Binion; Weidong Fu; Richard Reardon (September 2004). "Bischofia javanica (Bishop wood)". Invasive Plants of Asian Origin Established in the US and Their Natural Enemies (PDF). USDA Forest Service. pp. 34–35. Archived from the original (PDF) on 2006-09-28. பார்க்கப்பட்ட நாள் 2006-11-17. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  3. Li Bingtao (1994). Li Bingtao. ed. "Bischofia Bl.". Flora Reipublicae Popularis Sinicae (Science Press. Beijing, China) 44 (1): 184–188. 
  4. Gardner, Simon, Pindar Sidisunthorn, and Vilaiwan Anusarnsunthorn. A Field Guide to Forest Trees of Northern Thailand. Bangkok: Kobfai Publishing Project, 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழவேங்கை&oldid=3930365" இலிருந்து மீள்விக்கப்பட்டது