சோழர் கால மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழர்கால பொதுமருத்துவர்[தொகு]

பிற்கால சோழர் ஆடசி காலத்தில் ஆதுலர் சாலைகளில் மருத்துவமனைகள் கைநாடி பார்த்து பொதுப்பிணி நீக்கும் பொது மருத்துவர்களும் உடற்கூறுகளை ஆராய்ந்து காயம், கட்டி, இரணம் ஆகியவற்றை அறுத்து அறுவை சிகிச்சை செய்யும் அறுவை சிகிச்சை மருத்துவர்களும் பணியாற்றியுள்ளனர். 'சவர்ணன் அரையன் சந்திரசேகரன், கோதண்டராமன் அசுவதாமபட்டன்' என்ற பொது மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளை எழுதிக்கொடுக்கும் பணியினை செய்துள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 90 கலம் நெல்லும், 80 காசும் வழங்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை மருத்துவர்[தொகு]

Surgean சல்லியக் கிரியை பண்ணுவான் என்ற பெயரில் அறுவை சிகிச்சை மருத்துவர்களும் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 30 கலம் நெல்லும், 2 காசும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்மருத்துவர்களுக்கு கொடையாக 'மருத்துவக்காணி' என்ற பெயரில் நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை உதவியர்[தொகு]

Assitant Surgean நோயாளிகளுக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கு அறுவைசிகிச்சை உதவியர் நாவிதர் என்ற பெயரில் இருந்துள்ளனர். இவர்கள் மருத்துவத்தொழிலையும், சவரத்தொழிலையும் செய்துள்ளனர். இவர்களின் மனைவியர் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் செய்துள்ளனர். ஆதனால் இவர்கள் “மருத்துவச்சி” என்று அழைக்கப்பட்டுள்ளனர். இந்நாவிதர்களுக்கு 15 கலம் நெல் ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ செவிலியர்[தொகு]

Nurse சோழர் ஆட்சியில் மருத்துவர்களுக்கு உதவியாக மருத்துவப் பணிப்பெண்கள் இருந்துள்ளனர். இவர்களை 'மருந்து அடும் பெண்டுகள்' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இம்மருத்துவ செவிலியர்களுக்கு ஊதியமாக 30 கலம் நெல்லும் 1 காசும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

[1] இராசராசன் துணுக்குகள் நூறு வெளியீடு :தமிழ்நாடு தொல்லியல் துறை, பக்கம் எண் 24,25.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_கால_மருத்துவம்&oldid=2748918" இருந்து மீள்விக்கப்பட்டது