சோழமாதேவி கயிலாயமுடையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழமாதேவி கயிலாயமுடையார் கோயில் திருச்சிக்கு அருகில் சோழமாதேவி என்னும் ஊரில் உள்ள கோயிலாகும். இராசராசசோழனுக்கு பல தேவியர்கள் இருந்துள்ளனர். அவர்களுள் சோழமாதேவி என்பவர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஆடவல்லான், ரிஷபவாகனர் போன்ற செப்புத்திருமேனிகளை செய்தளித்துள்ளார்.[1]

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் திருவெறும்பூரிலிருந்து தெற்கே சூரியூர் செல்லும் சாலையில் மூன்று கிமீ தொலைவில் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் சோழமாதேவி என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன்[தொகு]

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனான ஸ்ரீகயிலாயமுடையார், ஸ்ரீகைலாசர் பரமேசுவரர் என்றழைக்கப்படுகின்றார்.

அமைப்பு[தொகு]

இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக உள்ளது. மகாமண்டத்தில் தெற்கு நோக்கிக் காணப்படும் தேவியின் சன்னதி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இம்மண்டபத்தில் காணப்படும் மாலை கட்டும் மேடை போன்றவை ஒரு காலத்தில் இங்கு சிறப்பான வழிபாடு நடைபெற்றதை மௌனமாய் எடுத்துரைக்கின்றன.[1]

சிற்பங்கள்[தொகு]

கருவறைச் சுவரின் தேவகோட்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் அதிட்டானப் பகுதியில் முப்பட்டைக் குமுத அலங்காரத்திற்கு மேல் சிறுபலகைச் சிற்பங்கள் உள்ளன. காளியமர்த்தனர், கஜசங்காரமூரத்தி, குடையுடன் ரிஷபம், நடன மகளிர், இசைக்கருவி வாசிக்கும் ஒருவன், ஆடல்வல்லான், திரிபுராந்தகர், கஜலட்சுமி, சரசுவதி, அன்னம், அய்யனார், சிங்கம், யாளி, லிங்கோத்பவர் போன்ற அழகிய சிற்பங்கள் சிறுவடிவங்களில் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

<references>

  1. 1.0 1.1 1.2 1.3 ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன், சோழமாதேவி கயிலாயமுடையார் கோயில், மகாமகம் 1992 சிறப்பு மலர்