சோல் இசுபீகல்மேன்
| சோல் இசுபீகல்மேன் | |
|---|---|
சோல் இசுபீகல்மேன் | |
| பிறப்பு | திசம்பர் 14, 1914 புரூக்ளின், நியூ யார்க், அமெரிக்கா |
| இறப்பு | சனவரி 21, 1983 (அகவை 68) நியூ யார்க், நியூ யோர்க் மாநிலம், [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கா] |
| தேசியம் | அமெரிக்கர் |
| துறை | மூலக்கூற்று உயிரியல், மரபியல் |
| பணியிடங்கள் | இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்), கொலம்பியா பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | சிட்டி கல்லூரி ஆஃப் நியூயார்க், செயின் லூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகம் |
| முனைவர் பட்ட மாணவர்கள் | நோர்மேன் ஆர். பேசு |
| அறியப்படுவது | நியூக்ளிக் அமில கலப்பினமாக்கள், இசுபீகல்மேனின் மான்ஸ்டர் பரிசோதனை |
சோல் இசுபீகல்மேன் (Sol Spiegelman) (திசம்பர் 14, 1914 – சனவரி 21, 1983) என்பவர் ஒரு அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் ஆவார்.[1]
கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இவர் 1914ஆம் ஆண்டு திசம்பர் 14ல் நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்தார். இவரின் தந்தை மேக்ஸ் ஸ்பீகல்மேன் ஒரு ஹீப்ரு இறையியல் கல்லூரியில் ஆசிய மொழிகளையும் இறையியலையும் கற்பித்து வந்தவர். இவரது தாயாரின் பெயர் ஈவா. சிறுவயதிலேயே உயிரியலில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்பீகல்மேன் 1933ல் நியூயார்க்கின் சிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், உயிரியல் வகுப்புகள் ஊக்கமளிக்காதாலும் மந்தமான பேராசிரியர்களைக் கொண்டிருந்ததாலும் கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளில் கவனம் செலுத்தினார். பின்னர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் (செயின்ட் லூயிஸ்) கல்வி பயின்றார். 1944ல் கணிதவியலில் பட்டமும், அதன்பின் உயிரியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1] 1936, 1937ஆம் ஆண்டுகளில், கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்து புரூக்ளினில் உள்ள கிரவுன் ஐட்சு மருத்துவமனையின் ரிச்சர்ட் மார்டன் கோஸ்டர் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். ங்கு அவர் பாக்டீரியாவின் மரபியல் பற்றி ஆய்வு செய்தார்.
முக்கிய ஆராய்ச்சி பங்களிப்புகள்
[தொகு]இவர் ஸ்பீகல்மேன் ரிபோநியூக்ளிக் அமில தீங்குயிரிகளின் நகல் எடுக்கும் செயல்முறையை ஆய்வு செய்தார்.[1] குறிப்பாக, செல்களுக்கு வெளியே ரிபோநியூக்ளிக் அமில நகல் எடுக்கும் முறையை வெற்றிகரமாக நிரூபித்தார். இவரது மிகவும் புகழ்பெற்ற பரிசோதனை மான்ஸ்டர் பரிசோதனை ஆகும். இச்சோதனையில் பரிணாம வளர்ச்சியை சோதனைக்குழாயில் நிரூபிக்க, இவர் ஆர். என். ஏ மூலக்கூறுகளை செயற்கையாக தேர்வு செய்யும் சோதனை செய்தார்.[2] காலப்போக்கில், ஆர். என். ஏ மூலக்கூறுகள் சிறியதாகவும் வேகமாக நகல் எடுக்கக்கூடியதாகவும் மாறின. டி ஆக்சி ரிபோநியூக்ளிக் அமிலம் - ரிபோ நியூக்ளிக் அமிலம் கலப்பினமாக்கள் நுட்பங்களை உருவாக்கினார். இந்த ஆய்வு மரபணு வெளிப்பாட்டை ஆய்வு செய்ய உதவியது.[3] இவரது பிற்கால வாழ்க்கையில் புற்றுநோய்க்கும் தீங்குயிரிகளுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்தார். இவரது பணிகள் மூலக்கூறு உயிரியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, பரிணாம வளர்ச்சி மற்றும் மரபணு ஒழுங்குமுறை பற்றிய புரிதலை மேம்படுத்தியது.
பரிசுகளும் கௌரவங்களும்
[தொகு]1974ஆம் ஆண்டு அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கான லாஸ்கர் விருது வழங்கப்பட்டது. இது அமெரிக்காவின் மிக முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. 1981ஆம் ஆண்டு உயிரியலுக்கான ஆன்டோனியோ ஃபெல்ட்ரினெல்லி பரிசு பரிசு இத்தாலிய தேசிய அறிவியல் அகாதெமியால் வழங்கப்பட்டது. 1966ல் அமெரிக்க கலை அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "The Sol Spiegelman Papers: Biographical Overview". Profiles in Science. US National Library of Medicine. March 12, 2019. Retrieved 18 January 2021.
- 1 2 "Sol Spiegelman". Member Directory. National Academy of Sciences. Retrieved 18 January 2021.
- ↑ Gillespie D; Spiegelman S (July 1965). "A quantitative assay for DNA-RNA hybrids with DNA immobilized on a membrane". J Mol Biol 12 (3): 829–42. doi:10.1016/S0022-2836(65)80331-X. பப்மெட்:4955314. https://archive.org/details/journal-of-molecular-biology_1965-07_12_3/page/829.