சோல்கடி
சோல்கடி( Solkadhi) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஒரு வகை புரோபயாடிக் பானமாகும். இது பொதுவாக சாதத்துடனோ அல்லது சில சமயங்களில் உணவுக்குப் பிறகோ உட்கொள்ளப்படும் ஒரு பசியூக்கியாகும். கொங்கன் பகுதிகளில், குறிப்பாக கோவா, மங்களூர், கருநாடகாவின் வடக்குப் பகுதிகள் (குறிப்பாக பெலகாவி) மற்றும் மகாராட்டிராவின் கடலோரப் பகுதிகளில் இது பிரபலமாக உள்ளது. இது தேங்காய்ப்பால் மற்றும் உலர்ந்த கொக்கும் தோல்களிலிருந்து (அகல்/அம்சுல்) தயாரிக்கப்படுகிறது, இவற்றின் ஆந்தோசயனின் நிறமிகள் இதற்கு அடர் ஊதா-இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கின்றன.
தயாரிப்பு
[தொகு]சோல்கடி [1] தேங்காய் பால் எனப்படும் புதிய தேங்காயின் திரவச் சாற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக அகல் அல்லது கோகம், சிறிதளவு உப்பு மற்றும் சுவைக்காகவும் புரோபயாடிக் உள்ளடக்கங்களுக்காகவும் மிளகாய்-பூண்டு விழுதுடன் கலக்கப்படுகிறது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ jogeshwari misal, jogeshwari misal. "solkadhi".
- ↑ Amit, Dassana (2022-01-20). "Solkadhi Recipe | Solkadi (Kokum Curry)". Dassana's Veg Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-04.
- ↑ Abhyankar, Shoma (2023-08-03). "Kokum: India's naturally cooling fruit juice". BBC. Retrieved 2023-12-31.