சோலை வேங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருவித்திலைத் தாவரத் தொகுதியைச் சேர்ந்த சோலை வேங்கை யுஃபோர்பியேசிக் குடும்பத்தைச் சார்ந்தது. இப்பெரிய தாவரக் குடும்பத்தில் ஏறத்தாழ 300 பேரினங்களும் 7,500 சிற்றினங்களும் உள்ளன. சோலை வேங்கையைத் தொண்டி மலைப்பூவரசு என்றும் குறிப்பிடுவர்.

வாழ்விடம்: சோலை வேங்கை மேற்குத் தொடர்ச்சி மலை, தக்காணப்பீடபூமி,ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் 1500மீ. உயரம் வரை உள்ள மலைச்சாரல்களிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படும்.

இலைகள்: மாற்று இலையடுக்கம், அகங்கை வடிவ முக்கூட்டு இலை, இலைவிளிம்பு அரை வட்ட வடிவான வளைவுகள் உடையது. நீள் முட்டை வடிவானது; 10-15 செ.மீ. நீளம் பெற்றது.

மஞ்சரி: கிளைத்த நுனிவளர் மஞ்சரி இலை கோணத்தில் காணப்படும்.

மலர்கள்: ஒருபால் மலர்கள். ஈரில்லம் உடையவை. ஆண்பூக்கள் ஒரு தனித் தாவரத்திலும் பெண்பூக்கள் வேறொரு தனித் தாவரத்திலும் இருக்கும்.

கனி: உருண்டையானது; சதைப்பற்றுள்ளது. 3 அல்லது 4 அறைகளும் இரு தடுப்புகள் கொண்ட கனி உட்தோலும் உண்டு.

விதைகள்: நீள் சதுர முக்கோணமானவை. விதைத்தோல் ஓடு போன்றது. முளைசூழ்தசை பற்றுடையது. வித்திலை தட்டையானது. முட்டை வடிவானது.

பயன்கள்: விட்டங்கள், சட்டங்கள், பலகைகள் செய்ய மிகுதியாகப் பயன்படுகின்றது. இலைகளில் வைட்டமின் மிகுந்துள்ளமையால் மருத்துவப் பயன் உண்டு.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. புத்தகம்: அறிவியல் களஞ்சியம் தொகுதி: 11, வெளியீடு: தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம்: 76
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலை_வேங்கை&oldid=3719931" இலிருந்து மீள்விக்கப்பட்டது