உள்ளடக்கத்துக்குச் செல்

சோலைவாயம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சோலைவாயம்மன் என்பது விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் வவ்வால் குன்று. மணலப்பாடி ஆகிய ஊர்களில் உள்ள அம்மன் தெய்வம் ஆகும். சோலையின் வாயிலில் அமைந்துள்ள அம்மனே சோலைவாயம்மன் எனப்படுகிறது.

சிலையமைப்பு[தொகு]

உருவமற்ற கல் வைத்து வழிபடுகினறனர். தவிர சுடுமண் உருவச்சிலைகள் உள்ளன.அவற்றுள் சில இருகரங்களும் இடுப்பில் இணைந்த நிலையில் நின்ற தோற்றத்தில் காணப்படுகின்றன. வேறு சில இரு கால்களும் சம்மணம் இட்டு இரு கைகளை தொடையின்மீது வைத்து அமர்ந்த நிலையிலும் உள்ளன.

கோயில் அமைப்பு[தொகு]

ஊர் வெளிப்புறத்தே குன்றுகளும் மரங்களும் நிறைந்த இடத்தில் கோயில் உள்ளது. வவ்வால் குன்று என்ற ஊரில் குன்றுக்கடியில் சிலை வைத்து வழிபடுகின்றனர்.மணலப்பாடி என்ற ஊரில் மரத்தடியில் சிலை வைத்து வழிபடுகின்றனர்.

வழிபடுவோர்[தொகு]

சோலைவாயம்மனை ஆதிதிராவிடர் சிறப்பு நிலையிலும் பிறர் பொது நிலையிலும் வழிபடுகின்றனர். இவ்வம்மன் நெல்லை மாவட்டத்தில் சோலையம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலைவாயம்மன்&oldid=3639205" இலிருந்து மீள்விக்கப்பட்டது