சோலைக்காடுகள்
சோலைக்காடுகள் தென்னிந்தியாவில் அதிக மலைப்பகுதி பகுதிகளில் உள்ள மத்திய பள்ளத்தாக்குகளில் உள்ள புல்வெளி இருக்கும் வளர்ச்சி குன்றிய வெப்பமண்டல மோண்டேன் வன இணைப்புகளை கொண்ட மலைப்பகுதி ஆகும். சோலைவனப்பகுதிகள் பொதுவாக பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன. இவை மலைப்பகுதியின் புல்வெளி தொடரலையின் மூலம் பிரிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் (shola) என்று குறிப்பிடப்படுகிறது[1]. இது தமிழ் மொழியிலிருந்து வந்திருக்கக்கூடும் என்றும் கருதுப்படுகிறது.
தோற்றம் மற்றும் பரவல்
[தொகு]சோலைக்காடுகள் பொதுவாக தென் இந்தியாவில் நீலகிரி மாவட்டம்[2][3], கன்னியாகுமாரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் எல்லைகளில் அதிக உயரத்தில் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் மேலே சோலைக்காடுகள் உருவாகும் என்றாலும், சோலைக்காடுகள் பல மலை எல்லைகளில் 1600 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
- ↑ Ranganathan, C. R. (1938). "Studies in the ecology of the shola grass-land vegetation of the Nilgiri Plateau". Indian Forester 64: 523–541.
- ↑ Bor, N. L. (1938). "The vegetation of the Nilgiris". Indian Forester 64: 600–609.