உள்ளடக்கத்துக்குச் செல்

சோலார் மாமாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோலார் மாமாசு (Solar Mamas) என்பது இந்தியாவில் உள்ள பேர்பூட் கல்லூரியின் சூரியசக்தித் திட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரியும் பெண்களுக்கு வழங்கப்படும் பெயராகும். இவர்கள் நேரடிப் பயிற்சி பெற்ற, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். முறையான கல்வி அல்லது எழுத்தறிவு சிறிதும் இல்லாத 35 முதல் 50 வயதுக்குட்பட்ட, சிறு குழந்தைகள் இல்லாதவர்களாக உள்ளனர். மேலும் பெரும்பாலும் வறுமையில் வாடும் கிராமப்புறங்களிலிருந்து வரும் இந்தப் பெண்கள், முன்பு மின்சார வசதி இல்லாத தங்கள் கிராமங்களில் சூரியசக்தித் தகடுகள் மற்றும் உபகரணங்களை ஒன்றுசேர்த்து, நிறுவி, பழுதுபார்த்து, பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், இந்தப் பெண்கள் ஒரு நிலையான வருமானத்தைப் பெறுவதோடு, தங்கள் வேலை, கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பான, நீடித்த ஒளி மூலத்தின் பலன்களை வழங்கி, மனைவி மற்றும் தாய் என்ற பாத்திரத்தைத் தாண்டி தங்கள் சமூகங்களில் ஒரு புதிய பங்கையும் வகித்து வருகின்றனர்.

பின்னணி

[தொகு]

பேர்புட் கல்லூரி 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் பங்கர் ராய் என்பவரால் நிறுவப்பட்டது. எழுத்தறிவற்ற பெண்களுக்குக் கல்வி கற்பிப்பது இதன் குறிக்கோள்களில் ஒன்றாகும்.[1] 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கல்லூரியின் சூரியசக்தித் திட்டம் 93 நாடுகளைச் சேர்ந்த 3,500 கிராமப்புறப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, முன்பை விட 2.5 மில்லியன் அதிகமான மக்கள் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குகளைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றனர்.[2]

சூரியசக்தி திட்டத்தில் உள்ள பெண்கள், இதற்கு முன்பு அதிக வெளி பயணம் செய்யாதவர்களாகவும் அல்லது தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றிராதவர்களாகவும் ஆவார்கள். இவர்கள் ஆறு மாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். இங்கு இவர்கள் எல்ஈடி விளக்குகள், சார்சு கட்டுப்படுத்திகள், வீட்டு விளக்கு அமைப்புகள் மற்றும் சூரிய கைவிளக்குகள் போன்ற சூரிய மின்மயமாக்கல் அமைப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தத் திட்டம் பல்வேறு வணிக கூட்டாண்மைகளுடன் இணைகிறது. இதன் மூலம் தேவையான வன்பொருட்கள் இவர்களின் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு, பெண்கள் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பி வந்தவுடன் இவற்றின் பணிகளை மேற்க்கொள்கிறார்கள்.[3][4][5]

இப்பெண்கள் வகுப்பறைகளில் இருப்பதற்குப் பழக்கமில்லாதவர்களாகவும், பன்மொழி, பன்முக கலாச்சார கற்றல் குழுக்களில் தங்களைக் கண்டுகொள்வதாலும், தொழில்நுட்பத்தைப் பற்றிய மர்மத்தை நீக்கவும், தேவையான திறன்களை வழங்கவும், படங்கள், சைகைகள், நடைமுறை அனுபவம் மற்றும் சைகை மொழி போன்ற கற்பித்தல் முறைகளை இந்தப் படிப்புகள் மூலம் கற்பிககப்படுகிறன.[1][6]

புவியியல் பரவல்

[தொகு]

தற்போது பல நாடுகளில் சூரிய சக்தி தாய்மார்கள் இருந்து வகின்றனர். உதாரணமாக, சான்சிபாரில், பேர்பூட் கல்லூரி 2015ஆம் ஆண்டு முதல் 65 பெண்களுக்கு சூரிய சக்தி பொறியியலில் பயிற்சி அளித்துள்ளது. இவர்கள் சுமார் 30 கிராமங்களில் உள்ள 1,800 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளனர்.[7][8][9] மலாவி,[10] போட்சுவானா,[11] கென்யா மற்றும் தான்சானியா,[12] மற்றும் செனகல்[13] ஆகிய நாடுகளிலும் சூரிய சக்தி தாய்மார்கள் உள்ளனர். ஜோர்டானில், ராபியா என்ற பெடோயின் சூரிய சக்தி தாய் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[14][15][16] பசிபிக் தீவுப் பெண்களும் சூரிய சக்தி தாய்மார்களாகி வருகின்றனர்.[17] நேபாளத்திலும் சூரிய சக்தி தாய்மார்கள் உள்ளனர்.[17] தற்போது இந்தியா, சான்சிபார், புர்கினா பாசோ, லைபீரியா, குவாத்தமாலா, பிஜி மற்றும் செனகல் ஆகிய நாடுகளிலும் பயிற்சி மையங்கள் இருந்து வகின்றது. இதனால் சில பெண்கள் பயிற்சி பெற அதிக தூரம் பயணிக்க வேண்டியதில்லை.[18]

சூரிய சக்தி தாய்மார்கள் இப்போது வழக்கு ஆய்வுகள், கட்டுரைகள் மற்றும் கற்றல் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[19][20][21] இவர்கள் ஆராய்ச்சியின் பொருளாகவும் உள்ளனர்.[22][23][24] உதாரணமாக, சுவீடனில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இவர்களின் பணியை ஆய்வு செய்துள்ளனர். சூரிய சக்தி திட்டம், பெண்களை அறிவுள்ள மற்றும் திறமையான தனிநபர்களாக உருவாக்குகின்றன. மேலும் முறையான கல்வி இல்லாதவர்களான இவர்களை நிபுணர்களாகவும் சமூகத் தலைவர்களாகவும் மாறுவதற்கான திறனைக் ஏற்படுத்த முடியும். மேலும் சமூகத் தடைகளையும் உடைத்து இவர்கள் வாழ்க்கையில் உயர்வடைந்து வருகிறார்கள்.[25]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Roy, Bunker (2011-10-17). Learning from a barefoot movement (in ஆங்கிலம்). Retrieved 2025-02-02 via www.ted.com.
  2. "Barefoot College InternationalSolar | Barefoot College International" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-22. Retrieved 2025-01-29. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Solar Mamas: A Business Case Study For Pro-Bono Work". www.triplepundit.com. Retrieved 2025-01-29.
  4. Brands, Sustainable (2019-04-15). "Solar Mamas: Empowering Women to 'Flip the Switch' to Better Health, Renewable Energy". Sustainable Brands (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  5. London, Ben (2023-08-08). "DP World & Barefoot College International Renew ‘Solar Mamas’ - Senegal - DP World - Education" (in en-GB). DP World - Education இம் மூலத்தில் இருந்து 2024-11-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241102075450/https://education.dpworld.com/dp-world-barefoot-college-international-renew-solar-mamas-senegal/.
  6. Parvin Shaikh, Neda (2024-05-23). "Feminism in Practice: Learning from the Barefoot “Solar Mamas”". Journal of International Women's Studies 26 (3). பன்னாட்டுத் தர தொடர் எண்:1539-8706. https://vc.bridgew.edu/jiws/vol26/iss3/14/.
  7. Mureithi, Carlos (2025-01-15). "‘Solar Mamas empower our people by giving them electricity’: the women lighting up Zanzibar" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2025/jan/15/solar-mamas-empower-our-people-by-giving-them-electricity-the-women-lighting-up-zanzibar.
  8. ""Solar Mamas" on the cover of Nature Energy – UsersTCP" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  9. Mureithi, Carlos (24 January 2025). "Power play The Solar Mamas who are lighting up Zanzibar". [The Guardian Weekly]: pp. 28.
  10. "Meet the mamas fighting poverty through solar power". VSO (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  11. "Solar Mamas - Great Plains Foundation" (in ஆங்கிலம்). 2020-05-20. Retrieved 2025-01-29.
  12. "Solar energy, the Barefoot College and Enel in Africa". www.enel.com (in ஆங்கிலம்). 2018-04-13. Retrieved 2025-01-29.
  13. "Senegal's Solar Mamas: Empower Women | DP World". www.dpworld.com (in ஆங்கிலம்). Archived from the original on 2025-01-23. Retrieved 2025-01-29.
  14. Özadalı, Bünyamin. "Solar Mamas | Storyteller". Solar Mamas | Storyteller (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  15. "Watch 'Solar Mamas' by Mona Eldaief & Jehane Noujaim". www.thewhy.dk (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  16. "Transforming Lives and Empowering Women through Lighting Up Communities with Solar Energy". UN Women – Asia-Pacific (in ஆங்கிலம்). 2012-11-05. Retrieved 2025-01-29.
  17. "Their Story". Women Light the World (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2025-03-14. Retrieved 2025-01-29.
  18. Magistretti, Bérénice. "These "Solar Mamas" Are Trained As Engineers To Bring Power And Light To Their Villages". Forbes (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  19. "Case study: Solar Mamas". FutureLearn (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  20. Michael, Kavya; Ahlborg, Helene (August 2024). "A conceptual analysis of gendered energy care work and epistemic injustice through a case study of Zanzibar’s Solar Mamas" (in en). Nature Energy 9 (8): 947–954. doi:10.1038/s41560-024-01539-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2058-7546. https://www.nature.com/articles/s41560-024-01539-1.
  21. "latinamerica-press-vol26-no26-july-14-1994-8-pp". Human Rights Documents online. Retrieved 2025-01-29.
  22. Michael, Kavya; Ahlborg, Helene (August 2024). "A conceptual analysis of gendered energy care work and epistemic injustice through a case study of Zanzibar’s Solar Mamas" (in en). Nature Energy 9 (8): 947–954. doi:10.1038/s41560-024-01539-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2058-7546. https://www.nature.com/articles/s41560-024-01539-1.
  23. Sah, Sunita Kumari (2022). "Role of Gramin Bikas Bank to Empower the Women in Rural Areas of Nepal: A Case Study of Mirchaiya Municipality, Siraha District of Nepal". SSRN Electronic Journal. doi:10.2139/ssrn.4126467. பன்னாட்டுத் தர தொடர் எண்:1556-5068. https://doi.org/10.2139/ssrn.4126467.
  24. Vaidyanathan, Veda (2023). India's development cooperation in Africa: The case of "Solar Mamas" who bring light (Report). WIDER Working Paper.
  25. Ernström, Ulrika (2023-02-23). "The women who tear down power structures with solar energy". www.chalmers.se (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலார்_மாமாசு&oldid=4590000" இலிருந்து மீள்விக்கப்பட்டது