உள்ளடக்கத்துக்குச் செல்

சோரென்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் (Søren Peder Lauritz Sørensen ,ஜனவரி 9, 1868 - பிப்ரவரி 12, 1939) டென்மார்க்கில் உள்ள ஆவர்பியர்கு (Havrebjerg) என்னும் இடத்தில் பிறந்த புகழ்பெற்ற வேதியியலாளர். இவர் காடித்தன்மையை அளவிடும் pH (கரைசலின் ஐதரசன் அடர்த்தி) முறையின் கருத்துருவை முன்வைத்தவர்.

1901 முதல் 1938 வரை சோரென்சென், கோப்பன்ஹேகனில் உள்ள புகழ்பெற்ற கார்ல்சுபெர்க்ஆய்வகத்தின் தலைவரகாக இருந்தார்[1]. கார்ல்சுபெர்கில் இருந்தபொழுது அவர் செய்த ஆய்வுகளில் மின்மவணுக்களின் (அயனி) அடர்த்தியால் புரதப் பொருள்களில் ஏற்படும் விளைவை அறிந்தார்[2]. கரைசலில் ஐதரசன் அடர்த்தி (pH]) அறியத்தேவை இருந்ததால், அடர்த்தியைக் குறிப்பிட ஓர் எளிய அளவீட்டு முறையை 1909 இல் வகுத்தார்[3]. ஐதரசன் அடர்த்தியை அளவிட இவர் குறிப்பிட்ட pH குறியீட்டு[4] முறையைக் கொண்டு காடியின் காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகள் வழக்குக்கு வந்தன[5]. முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது, இரண்டாவது முறையில் ஐதரசனின் அடர்த்தியைப் பொறுத்து நிறமாறும் தாள்களின் நிறத்தை முன்கூட்டியே உள்ள நிறத்தாள்களில் உள்ள நிறத்தை ஒப்பிட்டு pH அளவை அளவிடுவது.

இவை தவிர 1907 இல் இவர் கண்டுபிடித்த சோரென்சென் ப்வோர்மோல் டைட்ரேசன் என்னும் முறைக்காகவும் இவர் புகழ் பெற்றார்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Sørensen, Søren Peter Lauritz (1868-1939)". 100 Distinguished European Chemists. European Association for Chemical and Molecular Sciences. Archived from the original on 2006-10-04. பார்க்கப்பட்ட நாள் 2007-01-09.
  2. "Søren Sørenson". Chemical Achievers - The Human Face of the Chemical Science. Chemical Heritage Foundation. Archived from the original on 2007-02-03. பார்க்கப்பட்ட நாள் 2007-01-09.
  3. Alberty, Robert (1996). Physical Chemistry (second edition ed.). John Wiley & Sons, Inc. pp. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-10428-0. {{cite book}}: |edition= has extra text (help); |pages= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)
  4. Sørensen, S. P. L. (1909). "Enzymstudien. II: Mitteilung. Über die Messung und die Bedeutung der Wasserstoffionenkoncentration bei enzymatischen Prozessen" (in German). Biochemische Zeitschrift 21: 131-304. 
  5. Nielsen, Anita Kildebæk (2001). "S.P.L. Sørensen" (in Danish). Biokemisk forening. Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2007-01-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரென்சென்&oldid=3556271" இலிருந்து மீள்விக்கப்பட்டது