உள்ளடக்கத்துக்குச் செல்

சோராபாக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 13 மாவட்டங்களின் வரைபடம்

சோராபாக் மாவட்டம் (Shorabak District)[1]ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடமான சோராபாக் நகரம் மாகாணத் தலைநகரான கந்தகாருக்கு 110 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான காபூலுக்கு 702.2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2020ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 13,020 ஆகும்.[2] இம்மாவட்டம் 21 பிப்ரவரி 2017 முதல் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்றது.[3]

அமைவிடம்

[தொகு]

கந்தகார் மாகாணத்தின் தென்கிழக்கில் அமைந்த சோராபாக் மாவட்டத்தின் மேற்கில் ரெக் மாவட்டம், வடக்கில் ஸ்பின் போல்டாக் மாவட்டம், கிழக்கிலும், தெற்கிலும் பாக்கித்தான் நாடும் அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

ஆப்கான்--பாகிஸ்தான் எல்லையில் அமைந்த சோராபாக் மாவட்டம், சுலைமான் மலைத்தொடரின் மேற்கில், கடல் மட்டத்திலிருந்து 1243 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shorawak". GEOnet Names Server. Retrieved 13 October 2019.
  2. "Kandahār (Province, Afghanistan) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. Retrieved 2023-03-20.
  3. "Taliban overruns Afghan district where al Qaeda ran training camps - FDD's Long War Journal". longwarjournal.org. 21 February 2017.
  4. "Shurabak topographic map, elevation, terrain". Topographic maps (in ஆங்கிலம்). Retrieved 2023-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோராபாக்_மாவட்டம்&oldid=4419879" இலிருந்து மீள்விக்கப்பட்டது