சோயி டொச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோய் டொச்
ஜோய் டொச்.jpg
பிறப்புஜோய் பிரான்சிஸ் தாம்சன் டொச்
நவம்பர் 10, 1994 ( 1994 -11-10) (அகவை 28)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010–அறிமுகம்
பெற்றோர்லியா தாம்சன், ஹோவர்ட் டொச்
வலைத்தளம்
https://twitter.com/ZoeyDeutch

சோயி பிரான்சிஸ் தாம்சன் டொச் (Zoey Francis Thompson Deutch, பிறப்பு: நவம்பர் 10, 1994) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகை. இவர் பியூட்டிஃபுல் க்ரீச்சர்ஸ், வாம்பயர் அகாடமி போன்ற திரைப்படங்களிலும், தி சூடே லைப் ஒன் டேக், ரிங்கர், போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

டொச் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். அவர் நடிகை லியா தாம்சன் மற்றும் இயக்குநர் ஹோவர்ட் டொச்வின் மகள் ஆவார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

ஜோய் டொச் 2010ஆம் ஆண்டு டிஸ்னி சேனலில் 'த சூட் லைஃப் ஆன் டெக் என்ற தொடரின் மூலம் தனது நடிப்பு தொழிலைத் தொடங்கினார். அதை தொடர்ந்து 2011ம் ஆண்டு என்ற தொடரில் ஒரு அத்தியாசத்தில் தோன்றினார். 2011ஆம் ஆண்டு மேயர் கப்கேக் என்ற திரைப்படத்தில் லானா மரோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதை தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு பியூட்டிஃபுல் க்ரீச்சர்ஸ் என்ற திரைப்படத்திலும் என்ற Switched at Birth தொடரிலும் நடித்தார். 2014ஆம் ஆண்டு வாம்பயர் அகாடமி என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது மிட்நைட் ரைடர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2011 மேயர் கப்கேக் லானா மரோனி
2013 பியூட்டிஃபுல் க்ரீச்சர்ஸ் எமிலி ஆசேர்
2014 வாம்பயர் அகாடமி ரோஸ்மேரி "ரோஸ்" ஹாத்வே
2014 மிட்நைட் ரைடர் மே படபிடிப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயி_டொச்&oldid=2966498" இருந்து மீள்விக்கப்பட்டது