உள்ளடக்கத்துக்குச் செல்

சோயா ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர்
சோயா ஹசன்
பிறப்பு7 ஆகத்து 1947 (1947-08-07) (அகவை 79)
லக்னோ, இந்தியா
வாழ்க்கைத்
துணை
முஷிருல் ஹசன்,1974
கல்விப் பணி
Notable worksஆதிக்கம் மற்றும் மக்கள் திரள் திரட்டல்: மேற்கு உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புற அரசியல்

சோயா ஹசன் (Zoya Hasan) (பிறப்பு: 7 ஆகஸ்ட் 1947) இந்திய அரசியல் அறிவியலாளர்.

கல்வி மற்றும் தொழில்

[தொகு]

இவர் 1947 ஆகத்து 7 ஆம் நாள் லக்னோ நகரில் பிறந்தார்.இவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] சோயா ஹசன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகவும் சமூக அறிவியல் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றினார்.2006 முதல் 2009 வரை இந்திய தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[2] மேலும் சூரிக், எடின்பரோ மற்றும் பாரிசில் உள்ள மனித அறிவியல் மையங்களில் வருகை பேராசிரியராக பணியாற்றினார்.சசெக்ஸ் பல்கலைக்கழக வளர்ச்சி ஆய்வு நிறுவனம், பெல்லாஜியோ மையம் மற்றும் பெர்லின் நவீன கிழக்காசிய ஆய்வு மையம் போன்ற இடங்களில் ஆய்வுப் புலமைப்பரிசில்களையும் பெற்றார்.இவர் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம், போர்டு அறக்கட்டளை, பன்னாட்டு வளர்ச்சி துறை, ஐக்கிய நாடுகள் சமூக வளர்ச்சி ஆய்வு நிறுவனம் மற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்காக ஆய்வுத் திட்டங்களில் பணியாற்றினார்.

சோயா ஹசனின் ஆய்வுகள் இந்திய அரசியல், அரசியல் கட்சிகள், இன அடையாளங்கள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் வடஇந்திய சமூக வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. குறிப்பாக உத்தரப் பிரதேச அரசியலைப் பற்றிய அவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.[3][4] இந்திய முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் சமூக மற்றும் கல்வி நிலைகள் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் இந்திய வரலாற்றாசிரியரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தருமான முஷிருல் ஹசன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.[5][6][7][8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Lama-Rewal, Stéphanie Tawa. Thébaud, Françoise; Isabelle, Ernot (eds.). "Zoya Hasan". Le Dictionnaire universel des Créatrices. Éditions des Femmes.
  2. ↑ "National Commission for Minorities". National Commission for Minorities. Retrieved 2019-07-18.
  3. ↑ Hasan, Zoya, Dominance and mobilisation: rural politics in western Uttar Pradesh, 1930-1980, Thousand Oaks, Calif.:Sage Publications, 1989
  4. ↑ Hasan, Zoya, Quest for Power, Oppositional Movements and Post-Congress Politics in Uttar Pradesh, New Delhi: Oxford University Press, 1998
  5. ↑ Hasan, Zoya (27 August 2009). "Legislating against hunger". தி இந்து. Archived from the original on 30 August 2009. Retrieved 9 February 2010.
  6. ↑ Bhagat, Rasheeda (5 September 2004). "A wake-up call". தி இந்து. Archived from the original on 6 June 2011. Retrieved 9 February 2010.
  7. ↑ George, Varghese K; Saroj Nagi (7 February 2010). "Return of the Gandhi topi". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 8 February 2010. Retrieved 9 February 2010.
  8. ↑ "Panel wants changes in quota law". The Times of India. 2 November 2006. Archived from the original on 11 August 2011. Retrieved 9 February 2010.
  9. ↑ Venkatesan, V (3 January 2009). "Negative action". Frontline. Archived from the original on 6 June 2011. Retrieved 9 February 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயா_ஹசன்&oldid=4639583" இலிருந்து மீள்விக்கப்பட்டது